60 ஆண்டுகளாக அறிவொளி பரப்பும் திருவள்ளுவர் படிப்பகம்!

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை கன்னார்தெருவில் 60 ஆண்டுகளைக் கடந்த திருவள்ளுவர் படிப்பகம் தற்போதும் உயிரோட்டமாக செயல்பட்டுவருகிறது. திருவள்ளுவர் படிப்பகப் பொறுப்பாளரும், தமிழ்பேராசிரியருமான கவிஞர் சோமசுந்தரபாரதி நம்மிடம் பேசும் போது, ஏராளமான தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

1957-ம் ஆண்டு பிப்ரவரி 2-ம் தேதி திருவள்ளுவர் படிப்பகம் தொடங்கப்பட்டது. தொழிலாளர்கள் மிகுந்த பகுதி கன்னார்தெருவாகும். இப்பகுதியில் சில்வர் பட்டறை தொழிலாளர்கள் உள்ளனர். அரசு ஊழியர், ஆசிரியர், தொழிலாளர்கள் என ஒன்றிணைந்து தொடங்கப்பட்டது இது. வருடந்தோறும் திருவள்ளுவர் தினத்தன்று மாணவ-மாணவிகளுக்கும் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி, எழுதும் போட்டி நடத்தப்படுகிறது. பொன்விழாவைக் கடந்த திருவள்ளுவர் படிப்பகத்திற்கு மதிப்புமிக்கவர்கள் வருகை புரிந்தது சிறப்பாகும். தவத்திரு குன்றக்குடி அடிகளார், கி.ஆ.பெ.விஸ்வநாதன், மா.பொ.சிவஞானம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் முதுபெரும் தலைவர்கள் பி.ராம்மூர்த்தி, எம்.ஆர்.வெங்கட்ராமன், இந்தியக்க ம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர்கள் ஜீவா, எம்.வி.சுந்தரம், தொழிற்சங்கத்தின் தலைவர் ஆர்.ஹெச்.நாதன், தவத்திரு பொன்னம்பலதேசிகர், பேராசிரியர் டாக்டர் ஞானசம்பந்தன்.. இன்னும் ஏராளமானோர் வருகைபுரிந்த படிப்பகம் இது.

இப்படிப்பகத்திற்கு தீக்கதிர்,தினத்தந்தி,தினமணி,தினமலர்,தி இந்து,தினகரன்,ஆகிய தினநாளிதழ்கள் வந்து கொண்டிருக்கின்றன.தினம்தோறும் வாசிப்பாளர்கள் 100-க்கு மேற்பட்டோர் படிப்பகம் வந்துபடிக்கிறார்கள். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை காலையில் எழுந்தவுடன்  முதலில் தேடுவது திருவள்ளுவர் படிப்பகத்தை தான். இங்கு அரிய பழமையான பத்திரிகைகள் பாதுகாத்து வைத்திருக்கிறார் சோமசுந்தர பாரதி.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!