பட்டுச்சேலை, பட்டுவேட்டி உடுத்தி மாட்டுவண்டியில் பயணம்செய்த பள்ளி மாணவர்கள்!

உலகெங்கும் கொண்டாடப்படும் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை, வேலம்மாள் நிறைநிலை மேனிலைப் பள்ளிக் குழந்தைகள் பாரம்பர்ய உடை அணிந்து வந்து கொண்டாடினர்.

பொங்கல்
 

இன்றைய நவீன காலகட்டத்தில், பெரும்பாலான மக்கள் பாரம்பர்யத்தை மறந்திருக்கிறார்கள். சிறு வயதிலிருந்தே அதைக் குழந்தைகளுக்குப் புகட்ட வேண்டும் என்ற நோக்கில், சென்னை டி.எஸ் கிருஷ்ணா நகரில் அமைந்துள்ள வேலம்மாள் நிறைநிலை மேனிலைப் பள்ளியில், மாணவர்கள் கிராமத்துப் பொங்கல் வைத்துக் கொண்டாடினார்கள். 


இதுகுறித்து பள்ளியின் தாளாளர் எம்.வீ.எம் வேல்மோகன் கூறுகையில், 'இன்றைய மாணவர்களிடத்தில் பாரம்பர்யத்தைக் கொண்டு சேர்ப்பது மிகவும் அவசியம். அது, அடுத்த தலைமுறைக்கு பாதுகாப்பாக எடுத்துச்செல்லும். நகர வாழ் மாணவர்கள் பெரும்பாலானவர்களுக்கு, அரிசி எதிலிருந்து வருகிறது என்றுகூட தெரியாத நிலை இருக்கிறது. இந்தக் காலத்தில், பொங்கல் திருநாளை பாரம்பர்யம் மாறாமல் எடுத்துச்சொல்லவேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம் என்றார்.

பொங்கல்

இந்நிகழ்ச்சியில், சூரியன் பொங்கல், வழக்காடு மன்றம், கிராமிய நடனம், கிராமியப் பாடல்கள், ஒயிலாட்டம், மயிலாட்டம், சிலம்பாட்டம், தப்பாட்டம், புலியாட்டம், காவடியாட்டம், கரகாட்டம் உள்ளிட்டவையும், உரி அடித்தல், ரங்கராட்டினம், பல்லாங்குழி, பரமபதம், பாண்டி, ஆடுபுலியாட்டம் உள்ளிட்ட கிராமத்து விளையாட்டுகளும் நடைபெற்றன. நிகழ்ச்சியில் மாணவர்கள், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்களின் பெற்றோர்களும் பாரம்பர்ய உடையில் வந்து கலந்துகொண்டனர்.    

Do you like the story?

Please Appreciate the Author by clapping!