ஏர்வாடி அருகே தடைசெய்யப்பட்ட கடல் அட்டையுடன் 2 மீனவர்கள் கைது!

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி அருகே சின்ன ஏர்வாடி கடற்கரையில் விசைப்படகு ஒன்றில் இருந்த 150 கிலோ கடல் அட்டையுடன் இரு விசைப்படகு மீனவர்களை நாட்டுப்படகு மீனவர்கள் பிடித்து அதிகாரிகளிடம்  ஒப்படைத்தனர்.

ஏர்வாடி அருகே கடல் அட்டை பிடிக்க பயன்படுத்திய விசைப்படகு


ராமநாதபுரம் மாவட்டம் சின்ன ஏர்வாடி கடற்கரையில் மண்டபம் பகுதியை சேர்ந்த 5 விசைப்படகுகள் கடலில் நாட்டுப்படகு மீனவர்களுக்கான பகுதிகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்தன.கடற்கரையோரத்தில் மீன்பிடிக்க கூடாது என்ற விதிமுறையை மீறி கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த விசைப்படகுகள் பற்றி தகவல் அறிந்த நாட்டுப்படகு மீனவர்கள்  சிலர்  தங்கள் படகுகளில் அவர்களை விரட்டி சென்றுள்ளனர். இதில் 4 படகுகள் தப்பிய நிலையில் ஒரு படகு மட்டும் பிடிபட்டது. அந்த படகில் தடை செய்யப்பட்ட கடல் வாழ் உயிரினமான 150 கிலோ கடல் அட்டைகள் இருந்தன. இவற்றுடன் பிடிபட்ட  படகினை கரைக்கு கொண்டுவரும் போது படகில் இருந்த 4 மீனவர்களில் இரு மீனவர்கள் கடலில் குதித்து தப்பி விட்டனர்.

படகில் மீதமிருந்த மண்டபம் பகுதியை சேர்ந்த சலந்தர்சகுபர் சாதிக்(29), வேதாளையை சேர்ந்த குரேஷி(33) ஆகிய இருவரையும் அவர்கள் வந்த விசைப்படகுடன் பிடித்து மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இதைத் தொடர்ந்து அவர்கள் இருவரையும் கைது செய்த கடலோரக் பாதுகாப்பு குழும போலீஸார் அவர்களிடம் இருந்த 150 கிலோ கடல் அட்டைகள் மற்றும் விசைப்படகினையும் பறிமுதல் செய்தனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!