அதிகாலை உறக்கம் நீங்கி சீக்கிரமாக எழுந்திருக்க என்ன செய்யலாம்?

தினமும் அதிகாலையில் உறக்கம் நீங்கி எழுந்து உடல்நலனைப் பாதுகாக்க வேண்டும் என்பதே எல்லோரின் விருப்பமும். ஆனால் நடைமுறையில் அது சாத்தியம் ஆவதில்லை. காலை ஒன்பது மணிக்கு அலுவலகம் செல்ல எட்டு மணிக்கு எழுபவர்களே இங்கு அதிகம். அதிலும் இந்த குளிர் காலங்களில் காலையில் எழுவது என்பது கஷ்டமான விஷயம் தான். சரி அதிகாலையில் எழுந்து கொள்ள என்னதான் செய்யலாம்? சின்ன சின்ன வழிமுறைகள் இங்கே கூறப்பட்டுள்ளது. கடைபிடித்து பயன்பெறலாம்.

உறக்கம்

1. இரவு உறங்கப்போகும்போது உங்கள் ஆழ்மனத்துக்குள்ளேயே இத்தனை மணிக்கு எழும்ப வேண்டும் என்று பல முறை சொல்லிக்கொள்ளுங்கள். நிச்சயமாக நமது பயாலஜிக்கல் கிளாக் எனும் உடலியல் கடிகாரம் நம்மை எழுப்பிவிடும்.

2. குறிப்பிட்ட ஒரே நேரத்தில் எழும்புவதை வழக்கமாகக் கொள்ளுங்கள். விடுமுறை நாட்களில் பத்து மணி வரை உறங்கினால், வேலை நாட்களிலும் அதே நிலைமை தான் உண்டாகும்.

3. சூரிய வெளிச்சம் படும் இடத்தில் உறங்குங்கள். சூரிய ஒளியே உங்களை எழுப்பி விடும்.

4. நடுஇரவில் எழுந்து கழிப்பறை செல்வதை பழக்கமாக வைத்துக்கொள்ளாதீர்கள். தூக்கம் கலைந்து போவதால் காலையில் எழும்புவது சிரமமாகி விடும். 

5. இரவு உணவு குறைவாக இருப்பதே நல்லது. பசி கூட உங்களை அதிகாலையில் எழுப்பி விடும்.

அதிகாலை

6. வெதுவெதுப்பான நீரில் குளித்து விட்டு உறங்கினால், ஆழ்ந்த தூக்கமும், அதிகாலை விழிப்பும் வரும் என்று பெரியவர்கள் சொல்வதுண்டு.

7. இரவு நீண்ட நேரம் விழித்திருக்க வேண்டாம். சீக்கிரமே உறங்கும் பழக்கத்தை வைத்துக்கொண்டால், தானாகவே சீக்கிரமாக எழும்புவதையும் நம் உடலே பார்த்துக்கொள்ளும். 

8. இரவு உணவுக்குப் பிறகு ஏதாவது ஒரு பழம் (கொய்யா, வாழை, பப்பாளி) சாப்பிட்டாலும் அதிகாலை எழும்பலாம் என்று சித்த மருத்துவம் கூறுகிறது. பழங்கள் இரவு ஜீரணமாகி குடலில் உள்ள கழிவுகளை சுத்தப்படுத்தி காலையிலேயே வெளியேற்ற உங்களை எழுப்பி விடுமாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!