"மாதவிடாய் பற்றி எனக்கு 19 வயதில்தான் தெரியும்” - நடிகர் அக்‌ஷய் குமார்

அக்‌ஷய் குமார்

மிழகத்தைச் சேர்ந்த அருணாசலம்  முருகானந்தனின் வாழ்க்கையைத் திரைப்படமாக்கியிருக்கும் நடிகர் அக்‌ஷய் குமார்,  மாதவிடாய் பற்றி தனக்கு 19 வயதில்தான் தெரியும் என்று கூறியுள்ளார்.  

வரும் 25-ம் தேதி வெளியாக உள்ள ‘பட்மேன்’ திரைப்படத்தைப் பற்றி நடிகர் அக்‌ஷய் குமார் பேசுகையில், “ 'பட்மேன்' பற்றி சமூக வலைதளங்களில் பல ஆண்கள் பேசுவதைக்  கவனிக்கிறேன்.  'பட்மேன்'  டிரெய்லர்  பார்த்தீங்களா என்று ஆண்கள் டிஸ்கஸ் பண்ணிட்டு இருக்கிறார்கள். ரொம்ப சந்தோஷமா இருக்கு. எனக்கு 19 வயதாகும்போதுதான், மாதவிடாய் பற்றித் தெரிந்துகொண்டேன். ஒரு சானிட்டரி நாப்கினை நான் என் கையில் எடுத்துப் பார்த்ததில்லை. என் குடும்பத்தில் என்னை யாரும் நாப்கின் வாங்கிவரச் சொல்லி கேட்டதில்லை. இரண்டு வருஷங்களுக்கு முன்னாடிதான், இதைப் பற்றி விரிவாகத் தெரிந்துகொண்டேன். 

நான் நடித்த டாய்லெட், ஏக் பிரேம் காதா (கழிப்பறை பற்றாக்குறை பற்றிய கதை) திரைப்படம் வெளியாவதற்கு முன் 62 சதவிகிதம் பேர் திறந்தவெளியைக் கழிப்பறையாகப்  பயன்படுத்தினார்கள். இந்தத் திரைப்படம் வெளியான பின்பு, அது 33 சதவிகிதம் குறைந்தது.  சானிட்டரி நாப்கின் பயன்படுத்தாத பெண்கள் நம் நாட்டில் 82 சதவிகிதம் பேர் இருக்கிறார்கள். இந்தத்  திரைப்படம் வெளியான பிறகு, இது நான்கு, ஐந்து சதவிகிதம் குறைந்தாலும்கூட, அது மிகப் பெரிய மாற்றத்தைக் கொண்டுவரும்” என்று தெரிவித்தார்.  

இந்தத் திரைப்படத்தை, நடிகர் அக்‌ஷய் குமாரின் மனைவி டிங்கிள் கன்னா தயாரித்துள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!