`முதலில் இதைக் கவனிங்க கலெக்டர் சார்' - பாலூட்டும் தாய்மார்கள் ஆதங்கம்

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்த நல்ல திட்டங்களில் ஒன்று தமிழகம் முழுவதும் உள்ள பேருந்து நிலையங்களில் குழந்தைகளுக்குத் தாய்மார்கள் பாலூட்டும் அறைகள் திறப்புத் திட்டம். ஆனால், குளித்தலை பேருந்துநிலையத்தில் உள்ள பாலூட்டும் அறையில் ஃபேன், உட்கார போதுமான பெஞ்சுகள் இல்லாமல் தாங்கள் அவதிப்படுவதாகத் தாய்மார்கள் அல்லாடுகிறார்கள்.

கருர் மாவட்டம், குளித்தலை நகராட்சி பேருந்து நிலையத்துக்கு வரும் குழந்தை வைத்திருக்கும் தாய்மார்கள் பெரும்பாதிப்படைந்து வருகிறார்கள். சிலநேரம் தாய்மார்கள் பாலுட்டும் அறை பூட்டியுள்ளது. ஏன் பூட்டியுள்ளது, எப்போது திறப்பார்கள் என்று பெண்கள் தவித்துப் போகிறார்கள். இதுபற்றி, நம்மிடம் பேசிய அவர்கள்,  "பாலுட்டூம் அறையைத் திறந்தாலும், போதிய லைட், மின்விசிறி வசதி கிடையாது. முறையாக மின் வசதியைப் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கு மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலமுறை கோரிக்கை வச்சுட்டோம். இதை முதலில் கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அதைவிடுங்க, நாங்க அமர்வதற்குப் போதிய பெஞ்சுகளும் இல்லை. தரையில் அமர்ந்து குழந்தைகளுக்குப் பாலூட்ட வேண்டியுள்ளது. அதோடு, நாங்கள் குடிக்கத் தண்ணீர் வசதி இல்லை. இதனால், பல நேரம் நாங்க அல்லாடிப்போகிறோம். நகராட்சி நிர்வாகத்து கிட்டயும், இந்த அடிப்படை  பிரச்னைகளைத்  தீருங்கன்னு பலமுறை கோரிக்கை வச்சுட்டோம். ஆனால், அவங்க அதைக் காதுலயே வாங்கலை. விரைவில் இந்தப்  பிரச்னைகளைத்  தீர்க்கலன்னா, குழந்தைகளோட போராட்டம் நடத்துவோம்" என்றார்கள் அதிரடியாக!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!