அதிகாரிகள்மீது ஆட்சியர் நடவடிக்கை..!

அருப்புக்கோட்டை ஆர்.டி.ஒ-வாக இருந்தவர், செல்வி. அதே ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் நேர்முக உதவியாளராக இருந்தவர்,  புஷ்பராஜன். மணல் லாரி விவகாரம் உட்பட பல சம்பவங்களில் இருவருக்கும் இடையே மோதல் உண்டானது. ஒரு கட்டத்தில், ஒருவருக்கொருவர் தொடர்புடைய அலுவலக ஆவணங்களை ஜெராக்ஸ் எடுத்து, லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகார் மனுக்களாக அனுப்பியுள்ளனர்.

கலெக்டர் சிவஞானம்

இதை, ஆரம்பத்திலயே மாவட்ட ஆட்சியர் கண்டித்துள்ளார். இதற்கிடையில், ஆர்.டி.ஒ. செல்வி, சமீபத்தில் ராமநாதபுரம் கலெக்டரின் நேர்முக உதவியாளராக டிரான்ஸ்பர் செய்யப்பட்டார்.  அவருக்குப் பதிலாக, தஞ்சாவூரைச் சேர்ந்த சுரேஷ்குமார் நியமிக்கப்பட்டார் . ஆனால், அவர் அருப்புக்கோட்டையில் பதவியேற்பதில் காலதாமதமானதால்,  ஆர்.டி.ஒ-வாக செல்வியே நீடித்துவந்தார். இதற்கிடையில்   ஆர்.டி.ஒ. செல்விக்கும் அவரது உதவியாளர் புஷ்பராஜனுக்கும் மீண்டும் மோதல் ஏற்பட்டது. 

உடனே புஷ்பராஜன் மீது தீண்டாமை ஒழிப்புச் சட்டத்தின் கீழ் ஆர்.டி.ஒ செல்வி போலீஸில் புகார் அளித்தார். சக அதிகாரிமீது போலீஸில் புகார் அளித்த விவகாரம் கலெக்டர் சிவஞானத்திடம் சென்றது. இதனால் கடுப்பான கலெக்டர், ஆர்.டி.ஒ பொறுப்பிலிருந்து செல்வியை விடுவித்து உத்தரவிட்டார். மேலும், புஷ்பராஜனை சாத்தூர் சிப்காட் பிரிவுக்கு டிரான்ஸ்பர் செய்து உத்தரவிட்டார்.  மோதல் அதிகாரிகள் விவகாரத்தால் விருதுநகர் கலெக்டர் அலுவலகம் கலகலத்துக் கிடக்கிறது .

Do you like the story?

Please Appreciate the Author by clapping!