''தலைமைத் தேர்தல் அதிகாரிகளின் சம்பளம் இருமடங்கு உயர்கிறது..!''

தேர்தல் ஆணையம்

நாடு முழுவதும் 8-வது ஊதியக்குழுவின் பரிந்துரைகள் கடந்த ஆண்டு அமலுக்குவந்தது. அதில், மத்திய அரசுச் செயலாளர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் மிகவும் உயர்ந்துவிட்டது என்று நீதித்துறையில் குரல்கள் ஒலித்தன. இதையடுத்து, உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளின் சம்பளத்தை இரண்டு மடங்குக்கு மேல் உயர்த்துவதற்கான மசோதா, நடந்து முடிந்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் தாக்கல்செய்யப்பட்டது. மக்களவையில் நிறைவேறிய இந்த மசோதா, வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் மாநிலங்களவையில் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அங்கு, இந்த மசோதா நிறைவேறிவிட்டால், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் சம்பளம், ஒரு லட்சம் ரூபாயிலிருந்து 2 லட்சத்து 80 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கும். 

உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் மற்றும் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகளுக்கு ரூ.2.50 லட்சமும் (ரூ.90 ஆயிரம்),ஹைகோர்ட் நீதிபதிகளுக்கு ரூ.2.25 லட்சமும் (ரூ.80 ஆயிரம்) மாதச் சம்பளம் உயரும் என்று தெரிகிறது. இவ்வாறு, உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் சம்பளத்தின் அடிப்படையில், 3 இந்தியத் தேர்தல் ஆணையர்களின் சம்பளமும் ரூ.2.50 லட்சமாக அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. தலைமைத் தேர்தல் ஆணையர்களுக்கும் சம்பளம் உயர்த்துவதற்கான மசோதா, வரும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இவர்களின் சம்பளத்தை உயர்த்துவதற்கான மசோதா நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதியின் ஒப்புதல் பெறப்பட்டால்,     3 தலைமைத் தேர்தல் ஆணையர்கள், தற்போது பெறும் சளம்பளத்தைவிட இரு மடங்கு சம்பளம் அதிகம் பெறுவார்கள் என்று டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!