மருத்துவ மாணவர் சரத்பிரபுவின் மரணத்தை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும்! பா.ஜ.க கோரிக்கை

டெல்லியில், தமிழக மருத்துவ மாணவர்  மர்ம மரணமடைந்ததை சி.பி.ஐ விசாரிக்க வேண்டுமென்று,  பா.ஜ.க நிர்வாகிகள் கூட்டத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது.

பா.ஜ.க-வின் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், மதுரையில் இன்று நடைபெற்றுவருகிறது. இந்தக் கூட்டத்தில், மாநிலத்தலைவர் தமிழிசை, தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா, தமிழக பா.ஜ.க முன்னாள் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர். இதில், அகில இந்திய அமைப்புச் செயலாளர் ராம்லால் பங்கேற்றுள்ளார். 

மருத்துவ மாணவர்

 ''தமிழகத்தில், வருங்காலத்தில் கட்சியை வெற்றிப்பாதையில் அழைத்துச் செல்ல வேண்டும், தமிழகத்தில் பலம்பெற்ற கட்சியாக பா.ஜ.க-வை மாற்றவும், உள்ளாட்சித் தேர்தலில் அமோக வெற்றிபெறுவதற்கும், நிர்வாகிகளுடன் ஆலோசனைசெய்யப்பட்டது. மேலும், டெல்லியில் மருத்துவ மாணவர் சரத்பிரபுவின்  இறப்பு, பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. இந்த மர்ம மரணம்பற்றி  சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். அரசு, டெல்லியில் படிக்கும் மாணவர்களுக்குத் தகுந்த பாதுகாப்பு அளித்திட வேண்டும்'' என்றும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக பா.ஜ.க-வினர் கூறினார்கள். இதற்கிடையே தமிழிசை, பத்திரிகையாளர்களை காலை 10 மணிக்கு சந்திக்கிறார் என்று  தகவல் அனுப்பிவிட்டு, இப்போது இல்லை, மாலையில் வாருங்கள் என்று திருப்பி அனுப்பியதால், செய்தியாளர்கள் தங்கள் அதிருப்தியை பா.ஜ.க நிர்வாகிகளிடம் தெரிவித்துவிட்டு வந்தனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!