வெளியிடப்பட்ட நேரம்: 18:00 (18/01/2018)

கடைசி தொடர்பு:18:00 (18/01/2018)

`ஹெச்.ராஜா வரம்பு மீறி பேசுகிறார்' - கொந்தளித்த ஆர்ப்பாட்டக்காரர்கள்

``நபிகள் நாயகத்தைச் சீண்டிப் பார்த்து முஸ்லிம்களை வம்புக்கு இழுக்கும் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்'' என்று வலியுறுத்தி சேலம் மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் சேலம் பழைய பேருந்து நிலையத்துக்கு அருகில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்துகொண்டார்கள்.

அப்போது, தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் மாநிலச் செயலாளர் அப்துல் ஜப்பார் கூறுகையில், ''இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களைவிட தமிழ்நாட்டில் சாதி, மத பேதமின்றி சாதி, மதக் கலவரங்கள் இல்லாமல் அண்ணன், தம்பிகளைப்போல வாழ்ந்து வருகிறோம். தமிழகம் அமைதிப் பூங்காவாகத் திகழ்ந்துகொண்டிருக்கிறது. அதை சீர்குலைக்கும் நோக்கத்தில் பி.ஜே.பி சுயநலத்துக்காக மதக்கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் மற்ற மதத்தினரை இழிவுபடுத்தி பேசி வருகிறார்கள்.

வைரமுத்து பேசினார் என்றால் அவரோடு விவாதம் செய்ய வேண்டும். அதை விட்டுட்டு நாங்கள் உயிராக நேசிக்கக்கூடிய நபிகளையும் அவருடைய மனைவிமார்களையும் இழிவுப்படுத்திப் பேசியதோடு இஸ்லாமியர்களைப் பற்றி வைரமுத்து பேசி இருந்தால் தலையை சீவி இருப்பார்கள் என்று இஸ்லாமியர்களை ஒரு தீவிரவாதிபோல காட்டுகிறார் இந்த ராஜா. கருத்து சுதந்திரம் என்ற பெயரில் ஹெச்.ராஜா வரம்பு மீறி பேசுகிறார். மற்ற மதங்களை இழிவுபடுத்திப் பேசுகிறார். இவரை தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தண்டிப்பதோடு தமிழக அரசு ஹெச்.ராஜா மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் உடனே கைது செய்ய வேண்டும்'' என்றார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க