வெளியிடப்பட்ட நேரம்: 19:20 (18/01/2018)

கடைசி தொடர்பு:19:20 (18/01/2018)

சென்னையில் தெருத் தெருவாகக் களமிறங்கினர் ரஜினி ரசிகர்கள்!

ரஜினி மக்கள் மன்றத்துக்கு ஆள் சேர்க்கும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றர் ரஜினி ரசிகர்கள். சென்னையின் முக்கிய பகுதிகளுக்குச் சென்ற ரசிகர்கள் அங்கு வசிக்கும் மக்களிடம், `ரஜினி மக்கள் மன்றத்தில்' இணையுமாறு கோரிக்கை விடுத்தனர். பின்பு, அவர்களுக்கு கட்டணமில்லா உறுப்பினர் படிவத்தை வழங்கினர். மக்கள் மன்றத்தில் சேர ஆர்வம்காட்டிய அப்பகுதி மக்கள் விண்ணப்ப படிவத்தைப் பூர்த்திசெய்துக் கொடுத்தனர்.

ரஜினி

கடந்த 2017, டிசம்பர் 31 அன்று, நடிகர் ரஜினிகாந்த் தான் அரசியலுக்கு வருவதாகத் தனது முடிவை அறிவித்தார். இதனால் கடந்த 21 வருஷங்களாக, ரஜினியின் அரசியல் பிரவேசத்துக்கு காத்திருந்த அவரின் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியடைந்தனர். இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் ரஜினி ரசிகர் மன்றம் மூலம் உறுப்பினர்கள் சேர்க்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இதன் ஒரு பகுதியாகச் சென்னையில் ரஜினி ரசிகர் மன்றத்தினர் வீடு வீடாகச் சென்று உறுப்பினர் சேர்க்கைப் பணியைத் தொடங்கினர். 

சென்னை
   

நாகை மாவட்டத்திலும் இப்பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. நாகை மாவட்டத்தில் உள்ள தாமரைக்குளம், தர்மர் கோயில் தெரு, வா.உ.சி தெரு உள்ளிட்ட பல்வேறு தெருக்களுக்கு ரஜினி ரசிகர்கள் விசிட் அடித்து வருகின்றனர். 

இது பற்றி ரஜினி ரசிகர் மன்ற உறுப்பினர்கள் கூறியதாவது,  "தமிழக அரசியலுக்கு மாற்றம் தேவை என்பதாலும், ரஜினி அரசியலுக்கு வந்தால் மக்களுக்கு நல்லது செய்வார் என்ற நம்பிக்கை தங்களுக்கு ஏற்பட்டுள்ளதாலும் ரஜினி மக்கள் மன்றத்தில் அனைவரும் ஆர்வத்துடன் சேர்கின்றனர்" என்று கூறினா்.

இந்த உறுப்பினர்கள் சேர்க்கும் முயற்சியில் நாகை மாவட்ட `ரஜினி ரசிகர் மன்ற'த் தலைவர் ரஜினி பாஸ்கர், மாவட்டச் செயலாளர் சுதந்திர வீரன், துணைத் தலைவர் குபேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர். மேலும் சீர்காழி, வேதாரண்யம், செம்பனார்கோவில், தரங்கம்பாடி, திருமருகல், கீழ்வேளூர் ஒன்றிய ரஜினி ரசிகர் மன்ற உறுப்பினர்களும் இந்த விண்ணப்ப படிவம் வழங்கும் பணியில் ஈடுபட்டனர்.