போராட்டத்தை இரண்டாம் நாளில் முடித்துகொண்ட ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர்..!

கடவுளாக வணங்கப்படும் ஆண்டாள் பற்றி, நாளிதழில் வெளியிட்ட கருத்துக்காக கவிஞர் வைரமுத்து வருத்தம் தெரிவித்தபோதிலும், அதை ஏற்கமாட்டோம், அவர், ஸ்ரீவில்லிபுத்தூர் கோயிலுக்கு 16-ம் தேதி வந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஸ்ரீவில்லிபுத்தூர் மணவாள மாமுனிகள் மடத்தின் சடகோப ராமானுஜ ஜீயர் நிபந்தனை விதித்தார்.

உண்ணாவிரதம்

வைரமுத்து வராததால், அவர் வரும் வரை கோயில் வளாகத்தில் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்து ஜீயர் நேற்று போராட்டத்தைத் தொடங்கினார். ஆண்டாள் பக்தர்களும், இந்து இயக்கங்களைச் சேர்ந்தவர்களும் அவருடன் உண்ணாவிரதம் இருந்தனர். இந்தப் போராட்டம் பரபரப்பாக போய்க்கொண்டிருந்த நிலையில், இன்று மதியம் உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டதாக அறிவித்தார். அவருடைய போராட்டத்தை வாபஸ் வாங்கச் சொல்லி அறநிலையத்துறை அதிகாரிகள், காவல்துறையினர் தொடர்ந்து அவரிடம் கேட்டுக்கொண்டதால் போராட்டத்தை முடித்துக்கொண்டதாகச் சொன்னாலும், வேறு சில அரசியல் முக்கியஸ்தர்களின் நிர்ப்பந்தங்களினால் அவர் போராட்டத்தை விலக்கிக் கொண்டதாக சொல்லப்படுகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!