வெளியிடப்பட்ட நேரம்: 11:46 (19/01/2018)

கடைசி தொடர்பு:12:06 (19/01/2018)

மணல் குவாரிகளை திறக்கப்போராடும் தமிழக அரசு! சாட்டையடி கொடுக்கும் உயர் நீதிமன்றம்

மணல் குவாரிகளை மூடும் உத்தரவுக்கு எதிராக தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது. முன்னர் ஆறு மாதங்களில் அனைத்து மணல் குவாரிகளையும் மூடுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

தமிழகத்தில் உள்ள அனைத்து மணல் குவாரிகளையும் 6 மாதத்துக்குள் மூட வேண்டும். ஜல்லியைத் தவிர கிரானைட் குவாரி உள்ளிட்ட பிற கனிமக் குவாரிகளைப் படிப்படியாக மூட அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து, உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் மாவட்ட ஆட்சியர்கள் பலர் வழக்குத் தொடுத்தனர். அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதையடுத்து, அரசு சார்பில் மீண்டும் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதையடுத்து, இன்று மேல்முறையீட்டு வழக்கில் இறுதி தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், மணல் குவாரிகளை மூடும் உத்தரவுக்கு எதிராக தமிழக அரசின் நிலைப்பாட்டை ஏற்க முடியாது என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்.