நித்யானந்தா சிஷ்யைகளுக்கு எதிராகக் களத்தில் குதித்த கட்சிகள்! | Complaint against nithyananda followers

வெளியிடப்பட்ட நேரம்: 16:40 (19/01/2018)

கடைசி தொடர்பு:16:40 (19/01/2018)

நித்யானந்தா சிஷ்யைகளுக்கு எதிராகக் களத்தில் குதித்த கட்சிகள்!

"தாழ்த்தப்பட்ட மக்களையும், கனிமொழியையும் இழிவாகப் பேசிவரும் நித்யானந்தா சிஷ்யைகள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென மதுரை போலீஸ் கமிஷனரிடம்  பல்வேறு அமைப்புகள் இன்று புகார் கொடுத்துள்ளன.

நித்யானந்தா

மதுரை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், தி.வி.க. மாவட்டச் செயலாளர் மணி அமுதன் தலைமையில், விடுதலை சிறுத்தை கட்சி, ஆதித்தமிழர் பேரவை உள்ளிட்ட ஐந்து கட்சிகள் சேர்ந்து புகார் மனு அளித்தனர்.

 அவர்கள் நம்மிடம் பேசும்போது, "தாழ்த்தப்பட்ட மக்களையும், தி.மு.க எம்.பி.,  கனிமொழியையும் இழிவாகப் பேசியவர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நித்யானந்தா மடத்தின் உறுப்பினர்கள், தாழ்த்தப்பட்ட மக்களை இழிவுபடுத்தும் விதமாகப் பேசி வருகின்றனர். அவர்கள்மீது வன்கொடுமைச் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்ய வேண்டும்.

தமிழ் நாட்டின் அரசியல் ஆளுமைகளை இழிவுபடுத்தியும், தரக்குறைவாகவும் தொடர்ந்து பேசிவரும் ஹெச்.ராஜா மற்றும் நயினார் நாகேந்திரனையும், நித்யானந்தா சிஷ்யைகள்மீதும் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட மக்களை இழிவாகப் பேசிவருபவர்கள்மீது தீண்டாமை வன்கொடுமைச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்தனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close