வெளியிடப்பட்ட நேரம்: 20:21 (19/01/2018)

கடைசி தொடர்பு:20:21 (19/01/2018)

`இனி எந்தக் கட்சியும் தனித்து ஆட்சியமைக்க முடியாது' - ஜி.கே.வாசன் தடாலடி

"தமிழகத்தில், இனி எந்தக் கட்சியும் தனித்து ஆட்சியமைக்க முடியாது" என்று த.மா.கா.தலைவர் ஜி.கே வாசன் கூறினார்.

தனித்து ஆட்சி

கட்சிப் பிரமுகர் திருமண விழாவில் பங்கேற்பதற்காக மதுரை வந்த த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் செய்தியாளர்களிடம் கூறும்போது, "தமிழக மாணவர்கள், தாெடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் மரணமடைவது வேதனைக்குரியது. அவர்களைப் பாதுகாப்பதற்காக  வெளிமாநில சுற்றுலா மையங்களில் மாணவர்களுக்கான பாதுகாப்பு ஆலாேசனை மையத்தை ஏற்படுத்துவதாேடு, டெல்லி, தமிழ்நாடு இல்லத்திலும் பாதுகாப்பு மையம் ஏற்படுத்தப்பட வேண்டும். பெட்ராேல் விலை உயர்வைக் கட்டுப்படுத்திட ஜிஎஸ்டி-க்குள் பெட்ராேல் விலை காெண்டுவரப்பட வேண்டும்.

தமிழகத்தில், இனி எந்தக் கட்சியும் தனித்து ஆட்சியமைக்க முடியாது. தேர்தல் நேரத்தில், மக்களின் மனநிலையைப் பாெறுத்து கூட்டணியை த.மா.கா முடிவுசெய்யும். திடீரென ஹஜ் மானியம் நிறுத்தப்பட்டது ஏற்றுக்காெள்ளக்கூடியதல்ல. உள்ளாட்சித்தேர்தல் வார்டுகள் மறு வரையறை செய்ததில் பல்வேறு குளறுபடிகள் உள்ளன. அதன்படி தேர்தல் நடந்தால், தேர்தல் நியாயமாக நடைபெறாது. மாநிலத்தேர்தல் ஆணையம் இதில் நேர்மையாகச் செயல்பட வேண்டும். மக்களின் அடிப்படைப் பிரச்னைகளுக்குத் தீர்வு காணாத உள்ளாட்சி அமைப்புகளைக் கண்டித்து, வரும் 29-ம் தேதி, தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாேடு, கும்பகாேணத்தில் நடைபெற உள்ள ஆர்ப்பாட்டத்தில் நான் பங்கேற்கிறேன். வைரமுத்து ஆண்டாள் பற்றிய கருத்து, அதனால் எழுந்த சர்ச்சைக்கு, இரு தரப்பினரும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்" என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க