வெளியிடப்பட்ட நேரம்: 08:28 (20/01/2018)

கடைசி தொடர்பு:08:48 (20/01/2018)

பேருந்துக் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது!

பஸ்

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பேருந்துகளுக்குக் கட்டண உயர்வு நேற்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, நகர் மற்றும் மாநகரப் பகுதிகளில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.3-லிருந்து 5 ஆக உயர்த்தப்பட்டது. மாநகரில் ஓடும் வால்வோ, புறநகர்ப் பேருந்துகள், வெளியூருக்கு இயக்கப்படும் பேருந்துகளுக்கும் கட்டணங்கள் உயர்த்தப்பட்டன.

போக்குவரத்துக் கழகங்கள் நஷ்டத்தில் இயங்கும் அதே சமயத்தில், தொழிலாளர் ஊதியம், புதிய பஸ்கள் வாங்குதல், டீசல் உள்ளிட்ட எரிபொருள் விலை உயர்வு ஆகிய காரணங்களால் பஸ் கட்டணம் உயர்த்தப்படுவது தவிர்க்க முடியாதது என்று அரசு தரப்பில் சொல்லப்பட்டது. அதன்படி, நகர் மற்றும் மாநகரப் பகுதிகளில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.3-லிருந்து 5 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. வால்வோ, குளிர்சாதனப் பேருந்துகள், விரைவுப்  பேருந்துகள், இடைநில்லாப் பேருந்துகளிலும் டிக்கெட் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு, இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. தமிழகத்தில், இதற்கு முன்பு கடந்த 2011-ம் ஆண்டு பேருந்துக் கட்டணம் உயர்த்தப்பட்டது.