வெளியிடப்பட்ட நேரம்: 19:40 (20/01/2018)

கடைசி தொடர்பு:19:40 (20/01/2018)

இளையராஜா, கார்த்திக், யுவன் இசையில் விஜய் சேதுபதி படம்!

விஜய்சேதுபதி நடிக்கும் புதுப்படத்தை சீனுராமசாமி இயக்குகிறார், யுவன் ஷங்கர் ராஜா தயாரிக்கிறார். ஏற்கெனவே `தென்மேற்குப் பருவக்காற்று' படத்தில் விஜய்சேதுபதியை முழுமையான ஹீரோவாக்கினார், சீனுராமசாமி. அடுத்து வைரமுத்து பாடல்கள் எழுத, யுவன் ஷங்கர் இசையமைப்பில் சீனுராமசாமி உருவாக்கிய 'தர்மதுரை' திரைப்படம் வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றது. நல்ல படம் என்கிற பெயரையும் சம்பாதித்துக்கொடுத்தது. சமீபத்தில் யுவன் ஷங்கர் ராஜா புதுப்படத்தைத் தயாரிக்க இருப்பதாகவும் அந்தப் படத்தில் விஜய்சேதுபதி நாயகனாக நடிப்பார் என்றும் சீனுராமசாமி இயக்குவார் என்றும் அறிவித்தனர்.

தற்போது தனது தயாரிப்பில் உருவாகும் படத்தில் அப்பா இளையராஜாவும் அண்ணன் கார்த்திக்கும் இசையமைப்பில் பங்களிப்பு தர வேண்டும் எனக் கடைக்குட்டி யுவன் பாசத்தோடு கேட்க இருவரும் சந்தோஷத்தோடு சம்மதம் தெரிவித்து இருக்கின்றனர். கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த 'மெல்லத் திறந்தது கதவு' படத்தில் தனது குருநாதர் எம்.எஸ்.விஸ்வநாதனுடன் இணைந்து இசையமைத்து இருந்தார் இளையராஜா. அதன்பிறகு, இப்போது தனது இரண்டு மகன்களுடன் சேர்ந்து புதுப்படத்துக்கு இசையமைக்கப்போகிறார் இளையராஜா. ஆக மும்மூர்த்திகள் இசையமைப்பில் உருவாகப் போகிறது, விஜய்சேதுபதி நடிக்கும் திரைப்படம்.                                                    

நீங்க எப்படி பீல் பண்றீங்க