பேருந்துக் கட்டணம் உயர்வுக்கு முதலமைச்சரின் விளக்கம் இதுதான்!

தவிர்க்க முடியாத சூழலில், மிகுந்த வேதனையுடன் அரசுப் பேருந்துக் கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

சென்னை தி.நகரில் அ.தி.மு.க. சார்பில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். 101-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, ‘’நீதிமன்ற உத்தரவு காரணமாகவே தமிழகத்தில் மணல் குவாரிகள் மூடப்பட்டுள்ளன. வெளிநாட்லிருந்து மணலை இறக்குமதி செய்து, மக்களின் தேவையைப் பூர்த்தி செய்ய முடியாது. மக்களுக்குக் குறைந்தவிலையில் மணல் கிடைக்க அரசு நடவடிக்கை எடுத்தும், நீதிமன்ற உத்தரவால் குவாரிகளை மூடவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்து, மக்களுக்குக் குறைந்தவிலையில் மணல் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்கும்’’ என்றார். 

பேருந்து கட்டண உயர்வு குறித்து பேசிய அவர், ’’தமிழகம் முழுவதும் 22 ஆயிரம் பேருந்துகள் மக்களுக்குச் சேவையாற்றுவதற்காக லாபநோக்கமின்றி இயங்கி வருகின்றன. அண்டை மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழகத்தில்தான் பேருந்து கட்டணங்கள் குறைவு. கடந்த ஏழாண்டு காலமாக படிப்படியாக டீசல், பேருந்து உதிரி பாகங்கள் விலை ஏற்றம் கண்டுள்ளன. எனவே, தவிர்க்கமுடியாத சூழலில், மிகுந்த வேதனையுடன்தான் அரசுப் பேருந்து கட்டணங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன’’ என்றார். 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!