முன்னாள் சபாநாயகர் பி.ஹெச். பாண்டியன் மனைவி மறைவு! முதலமைச்சர், துணைமுதலமைச்சர் நேரில் அஞ்சலி

முன்னாள் சபாநயகர் பி.ஹெச். பாண்டியனின் மனைவியும், நெல்லை மனோன்மனியம் சுந்தரனார் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தருமான சிந்தியா பாண்டியன் உடல்நலக் குறைவால் காலமானார். 


சென்னை அண்ணா நகரில் குடும்பத்தினருடன் வசித்து வந்த சிந்தியா பாண்டியனுக்கு, கடந்த சில நாட்களுக்கு முன்னர், உடல் நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, சென்னையில் தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில், அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். அவரது உடல் அண்ணாநகரில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. சிந்தியா பாண்டியன் உடலுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். இதுகுறித்து பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ‘’சிந்தியான் பாண்டியன் மறைவு ஈடுசெய்ய முடியாத இழப்பு. எம்.ஜி,ஆர்., ஜெயலலிதா ஆகியோரிடம் நன்கு அறிமுகம் ஆனவர் அவர்’’ என்று தெரிவித்துள்ளார். சிந்தியாவின் மறைவு எங்கள் குடும்பத்தில் ஏற்பட்ட இழப்பு என்று கூறியுள்ள துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பி.ஹெச். பாண்டியன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்வதாகக் கூறினார். 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!