வெளியிடப்பட்ட நேரம்: 21:30 (21/01/2018)

கடைசி தொடர்பு:14:25 (22/01/2018)

ஹார்வர்டு பல்கலைக்கழகத் தமிழ் இருக்கைக்கு நிதி! புத்தகத் திருவிழாக் குழு அசத்தல்!

ஹார்வர்டு பல்கலைக்கழகத் தமிழ் இருக்கைக்கு செங்கல்பட்டு சார் ஆட்சியர் ஜெயசீலன் அவர்களிடம் செங்கை புத்தகத் திருவிழா சார்பில் ஐம்பதாயிரம் ரூபாய் நிதி வழங்கப்பட்டது.

செங்கை புத்தகத் திருவிழா, ஹார்வார்டு பல்கலைக்கழக தமிழ் இருக்கை

காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் செங்கை பாரதியார் மன்றம் சார்பில் டிசம்பர் 23-ம் தேதி முதல் ஜனவரி 3-ம் தேதி வரை செங்கை புத்தகத் திருவிழா நடந்தது. இதில் 38 அரங்குகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தலைப்புகளில் பல ஆயிரம் புத்தகங்கள் இடம்பெற்றதன. 12 நாள்கள் நடைபெற்ற  புத்தகத் திருவிழாவில் நாள்தோறும்,  ஓய்வுபெற்ற நீதிபதிகள், அறிவியல் விஞ்ஞானிகள், எழுத்தாளர்கள், திரைப்பட இயக்குநர்கள், அரசு உயர் அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்கள். .

இந்த நிலையில், இரண்டாவது ஆண்டாக நடைபெற்ற செங்கை புத்தகத் திருவிழாவில் பணியாற்றியவர்களுக்கான பாராட்டுக்கூட்டம் இன்று செங்கல்பட்டில் நடைபெற்றது. செங்கை புத்தகத்திருவிழாவின் தலைவர் பேராசிரியர் ப.கிள்ளிவளவன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் புத்தகத்திருவிழாவின் ஆலோசனைக்குழு உறுப்பினர்கள்,  செங்கல்பட்டு சார் அட்சியர் ஜெயசீலன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். அப்போது ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் தமிழ் இருக்கைக்காக ரூபாய் ஐம்பதாயிரத்தை செங்கை புத்தகத் திருவிழாக் குழுவினர் செங்கல்பட்டு சார் ஆட்சியர் ஜெயசீலனிடம் வழங்கினர். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க