வெளியிடப்பட்ட நேரம்: 23:30 (21/01/2018)

கடைசி தொடர்பு:14:32 (22/01/2018)

இந்திய தேர்தல் ஆணையத்துக்கு புதிய தலைமை! 

இந்திய தேர்தல் ஆணையத்தின் புதிய தலைமை தேர்தல் அதிகாரியாக ஓம் பிரகாஷ் ராவத் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

தேர்தல் ஆணையம்


இந்திய தலைமைத் தேர்தல் அதிகாரியாக இருக்கும் ஏ.கே.ஜோதியின் பதவிக்காலம் நாளை (22-ம்) தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து, புதிய தலைமைத் தேர்தல் அதிகாரியாக ஓம் பிரகாஷ் ராவத் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவர் 23-ம் தேதி பதவியேற்றுக் கொள்கிறார்.  இவர் தற்போது தேர்தல் ஆணையர்களில் ஒருவராக இருப்பது குறிப்பிடத்தக்கது. இவர் தலைமைத் தேர்தல் அதிகாரியாகவிருப்பதைத் தொடர்ந்து, இவருடைய இடத்துக்கு முன்னாள் நிதித்துறைச் செயலாளர் அசோக் லவாசா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ராவத் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரை பதவியில் நீடிப்பார். இவருடையக் கண்காணிப்பின் கீழ் திரிபுரா, மேகாலாயா, நாகாலாந்து ஆகிய மாநிலங்களுக்கு முதலில் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த மாநிலங்களில் அடுத்த மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. கர்நாடகா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்களுக்கும் இவருடைய பதவிக்காலத்தில் தேர்தல் நடைபெற இருக்கிறது. ராவத் இங்கிலாந்தில் பட்டப்படிப்பு பயின்றவர். மத்திய அரசுச் செயலாளராக இவர் பணியாற்றியிருக்கிறார்.