ஆண்கள் வைத்த பொங்கல்! தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் அசத்தல்

சிவகங்கையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கம் சார்பில், சிவகங்கை இந்திரா நகர் மேடை அருகில் 100 குடும்பங்கள் பங்கேற்கும் முற்போக்கு பொங்கல் விழா நடைபெற்றது. இந்தப் பொங்கல் விழாவில் கலந்துகொண்ட ஆண்கள் பொங்கல் வைத்து குலவையிட்டு உற்சாகத்தோடு காணப்பட்டார்கள்.

இவ்விழாவானது காலை 9.30 மணியளவில் தொடங்கியது. விழாவில், கோழிக் குண்டு அடித்தல், பம்பரம் சுற்றுதல், கிட்டி அடித்தல், ஓட்டப்பந்தயம் உள்ளிட்ட  விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. ஆண்கள் பங்கேற்ற கோலம் போடும் போட்டி நடைபெற்றது. சிறந்த கோலம் தேர்வுசெய்யப்பட்டு பரிசு வழங்கப்பட்டது. பெண்களுக்கு உறி அடிக்கும் போட்டி உட்பட பல போட்டிகள் நடைபெற்றன. 

மாலை  இன்னிசை கிராமியப் பாடல்கள், ஒயிலாட்டம், கரகாட்டம், தாரை தப்பட்டை, கவிச்சரம் எனக் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கிராமத்தின் கலை, பண்பாடு, கலாசாரம் என அனைத்தையும் பிரதிபலிக்கும் வகையில் முற்போக்கு விழா நடைபெற்றதாக தமிழாசிரியர் இளங்கோ தெரிவித்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!