வெளியிடப்பட்ட நேரம்: 15:10 (22/01/2018)

கடைசி தொடர்பு:15:10 (22/01/2018)

சமையல் மாஸ்டரை கொடூரமாகக் கொன்ற சக பணியாளர்!

மதுரையில் உள்ள அரவிந்த் கண் மருத்துவமனையின் சமையல் மாஸ்டர் தலையில் கல்லைப் போட்டு படுகொலைசெந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரையில் உள்ள அரவிந்த் இலவச கண் மருத்துவமனையின் உள்ளே இருக்கும் கேன்டீனில் சமையல் வேலை செய்துவந்தவர், பட்டை முத்து. (வயது 40)  நெல்லையைச் சேர்ந்த இவருக்கும், இவரோடு பணியாற்றிய செல்வம் என்பவருக்கும் இடையே நேற்று இரவு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில், அவருக்கு அருகே இருந்த கோயில் நாக சிலைக் கல்லைத் தூக்கி தலையில் போட்டு, கொடூரமாகக் கொலைசெய்துவிட்டு, செல்வம் தப்பிச்சென்றுவிட்டார். உயிருக்குப் போராடிய பட்டை முத்து, சிறிது நேரத்தில் உயிரிழந்தார்.

இரண்டுபேரும் அந்த கேன்டீனில் வேலைக்குச் சேர்ந்து ஒரு மாதமே ஆகியுள்ளது. தப்பி ஓடிய செல்வத்தை, மதுரை அண்ணாநகர் போலீஸார் தேடிவருகின்றனர். இந்தச் சம்பவம், மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 'வேலைக்குச் சேர்ந்த ஒரு மாதத்தில் இவர்களுக்குள் பிரச்னை ஏற்பட்டது எங்களுக்குத் தெரியாது' என கேன்டீனில் வேலைசெய்யும் பணியாளர்கள் தெரிவித்தனர் .

நீங்க எப்படி பீல் பண்றீங்க