`அரசியல் என்பது ஒரு கடல்!' - உதயநிதி ஸ்டாலினுக்கு ஜெயக்குமார் பளீச் விளக்கம்

தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மகனும், கருணாநிதியின் பேரனுமான உதயநிதி ஸ்டாலின், யூ டியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்தபோது, `அரசியலுக்கு வருவதற்கான நேரம் வந்துவிட்டது. சினிமாவில் நடித்துக்கொண்டிருந்ததால் அரசியலில் நேரடியாக இயங்குவதைக் குறைத்துக்கொண்டேன். ஆனால், விரைவில் நேரடியாக களத்துக்கு வருவேன். பிறந்தது முதல் நான் தி.மு.க-காரன்தான்' என்று தனது அரசியல் என்ட்ரி குறித்து பரபரப்பாகப் பேசியுள்ளார்.

உதயநிதி ஸ்டாலின்

இதுகுறித்து, இன்று செய்தியாளர்கள் மத்தியில் பேசிய தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், `ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். ஆனால், யார் கரை சேர்வார்கள் என்பதுதான் முக்கியம். அரசியல் என்பது ஒரு கடல் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். இந்தக் கடலில், அ.தி.மு.க என்கின்ற கப்பல் கரை சேர்ந்துவிட்டது. எனவே, எந்த நதியாக இருந்தாலும் நாங்கள் சமாளிப்போம்' என்று ரிப்ளை கொடுத்துள்ளார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!