வெளியிடப்பட்ட நேரம்: 16:25 (22/01/2018)

கடைசி தொடர்பு:16:25 (22/01/2018)

உள்ளாட்சித் தேர்தல் வியூகம்! - மாவட்ட நிர்வாகிகளுடன் ஸ்டாலின் ஆலோசனை!

உள்ளாட்சித் தேர்தலுக்கு, தி.மு.க-வினர்  தேர்தலை எப்படி எதிர்கொள்வது என்பதுகுறித்து, மாவட்ட வாரியாக கட்சி நிர்வாகிகளுடன்  ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளார். இதற்கான அறிவிப்பை தி.மு.க பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் வெளியிட்டுள்ளார்.

மு.க. ஸ்டாலின்

சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில், உள்ளாட்சித் தேர்தல் பணிகள்குறித்து மாவட்ட வாரியாக ஊராட்சி செயலாளர் முதல் மாவட்டக் கழகச் செயலாளர் வரையுள்ள நிர்வாகிகள் மற்றும் கழகத்தின் அனைத்து துணை அமைப்புளின் அமைப்பாளர்கள் என எல்லோரையும் மாவட்ட வாரியாக தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சந்திக்க உள்ளார். பிப்ரவரி முதல் நாளிலிருந்து ஒவ்வொரு மாவட்டவாரியாக மார்ச் 22-ம் தேதி வரை தினம் ஒரு மாவட்டமாகச் சந்திக்கிறார். காலை மாலை  இரு வேளையும் இந்தச் சந்திப்பு நடக்க உள்ளது. இதற்கான அறிவிப்பை தி.மு.க பொதுச் செயலாளர் இன்று வெளியிட்டுள்ளார்.

உள்ளாட்சித் தேர்தலை எப்படி எதிர்கொள்வது, மாவட்ட வாரியாகக் கட்சியினரிடையே உள்ள முக்கியப் பிரச்னைகள் உள்ளிட்டவற்றையும் அப்போது விவாதிக்க உள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க