`அனைத்தும் கருகிவிட்டன!' - பயிருடன் வந்து கலெக்டரிடம் முறையிட்ட விவசாயிகள்

விவசாயிகள்

மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள மேல உரப்பனூர் கிராமத்தில், சுமார் 500 ஏக்கருக்கு மேற்பட்ட சம்பா உள்ளிட்ட நெற்பயிர்கள் பயிரிட்டு வருவதாகவும், பயிர்களுக்குத் தேவையான தண்ணீர் வசதி இருந்தபோதிலும், திடீர் நோய்த் தாக்குதலால் பயிர்கள் அனைத்தும் கருகுவதாகவும், பயிர்களைக் காப்பாற்ற ஆவன செய்யுமாறு கூறி, அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள், கருகிய நெற்பயிர்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

அதில், 'கடந்த ஆண்டு எங்கள் பகுதியில் நீரின்றி விவசாயம் பாதித்தது. ஆனால் இந்த ஆண்டு போதிய தண்ணீர் வரத்து இருந்தும் மர்ம நோய் காரணமாக பயிர்கள் அனைத்தும் கருகிவிட்டன. இதைத் தொடர்ந்து, விவசாய விரிவாக்க அதிகாரி அலுவலகம் சென்றும் தெரிவித்தோம். இந்நிலையில், விவசாயக் கல்லூரிமூலம் ஆய்வுசெய்தனர். ஆனால், பலகட்ட ஆய்வுகள் செய்தும், அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. எனவே, எங்கள் பகுதி விவசாயிகள் கடுமையாகப் பாதிப்படைந்துள்ளனர். எனவே, இதற்கான நிவாரணத்தை மாவட்ட நிர்வாகம் வழங்க வேண்டும்' எனக் கூறப்பட்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!