வெளியிடப்பட்ட நேரம்: 20:50 (22/01/2018)

கடைசி தொடர்பு:08:18 (23/01/2018)

இயக்குநர் வெற்றிமாறன் தயாரிப்பில் திரைப்படமாகும் “தறியுடன்” நாவல்!

இயக்குநர் வெற்றி மாறன் சிறந்த படங்களை இயக்குவதில் மட்டுமல்லாமல் தயாரிப்பதிலும் கைதேர்ந்தவர். தமிழ் எழுத்துலகில் பெரிதும் அறியப்பட்ட எழுத்தாளர் பாரதிநாதன் எழுதிய 'தறியுடன்' என்ற நாவலை தழுவிய படத்தைத் தயாரிக்கிறார். இந்தப் படத்துக்கு `சங்கத்தலைவன்'  என்ற பெயரிடப்பட்டுள்ளது

வெற்றிமாறன்

இந்தப் படத்தில் சமுத்திரக்கனி, கருணாஸ், 'அறம்' படத்தில் நடித்த சுனுலட்சுமி மற்றும் தொகுப்பாளினி ரம்யா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள், 'சங்கத்தலைவன்' இயக்குநர் மணிமாறன் இயக்க கிராஸ் ரூட் ஃபிலிம் கம்பெனி சார்பில் இயக்குநர் வெற்றிமாறன் தயாரிக்கிறார். வெற்றிமாறன் இயக்கிய 'விசாரணை' திரைப்படமும் ‘லாக்கப்’ என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு தயாரானது என்பது குறிப்பிடத்தக்கது.