`இன்று சாமானியர்கள் வென்ற புரட்சி' - ஜல்லிக்கட்டு குறித்து கமல் ட்வீட்

சென்னை மெரினாவில் கடந்த ஆண்டு நடந்த ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம் இந்திய அளவில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இதையடுத்து, 2017-ம் ஆண்டு ஜனவரி 23-ம் தேதி, ஜல்லிக்கட்டுக்கான அவசர சட்டத்தை நிரந்தர சட்டமாக்கும் மசோதா சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.


 

ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் ராஜசேகர், கார்த்திகேய சேனாபதி, ஹிப்ஹாப் ஆதி, ராஜேஸ், அம்பலத்தரசு ஆகியோர் முன்னிலையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. மத்திய அரசு ஒப்புதல் அளித்த பின்னர் இந்த சட்டத்துக்கு, அப்போதைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியும் ஒப்புதல் வழங்கினார். குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெற்ற பிறகு 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2-ம் தேதி ஜல்லிக்கட்டு சட்டம் அரசிதழில் வெளியிடப்பட்டது. 

ஜல்லிக்கட்டு மசோதா நிறைவேற்றப்பட்டு இன்றுடன் ஓராண்டு நிறைவுப் பெறுகிறது. இதைதான் கமல் ட்விட்டரில் ’ஜல்லிக்கட்டு போராட்டத்தின் ஆண்டுவிழா’ என்று குறிப்பிட்டுள்ளார்.


’இன்று ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் ஆண்டுவிழா சாமானியர்கள் வென்ற புரட்சி. தமிழனின் தளரா மனமும் அயரா தன்மையும் கண்ட வெற்றி. வாழ்க நற்றமிழர்!’ என்று குறிப்பிட்டுள்ளார். 
 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!