செல்லூர் ராஜுவின் அடுத்த பிரமாண்டம்! ஜனவரி 28-ல் அதிரப்பாேகும் மதுரை

மதுரை குலுங்க குலுங்க மீண்டும் ஒரு பிரமாண்ட விழாவை நடத்த தயாராகிவிட்டார் அமைச்சர் செல்லூர் ராஜு. இதனால் அரண்டுபோய் கிடக்கிறார்கள் மக்கள். ஆனால், இது கட்சி சார்ந்த விழா அல்ல. அவருடைய குடும்ப விழா. எதையும் பிரமாண்டமாக நடத்துவதில் அமைச்சர் செல்லூர் ராஜுவை அடித்துக்கொள்ள அ.தி.மு.க-வில் ஆளில்லை என்று சொல்லலாம்.

ஜெயலலிதா சிறைக்குச் சென்றபோதும், உடல் நலமில்லாமல் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டபோதும் மதுரையில் பிரமாண்ட ஆன்மிக பிரார்த்தனை விழாவை நடத்தி தமிழகத்தையே அதிர வைத்தார். இந்தப் பிரார்த்தனை விழாக்கள் மூலம் பால்காவடி, பறவைக்காவடி எடுக்க கூலி ஆட்கள் கும்பல் கும்பலாக வந்தார்கள். அந்தளவுக்கு அதற்கான ஏற்பாடுகளைக் கச்சிதமாகச் செய்பவர் செல்லூர் ராஜு. சமீபத்தில் ஜெயலலிதாவின் முதலாம் ஆண்டு நினைவு தினத்துக்கும் பிரமாண்ட அமைதி ஊர்வலத்தை நடத்தி அசத்தினார். இதனால் எரிச்சல் படும் பொதுமக்களைப் பற்றி அவர் கவலைப்பட்டதில்லை.  

மதுரை


இந்த நிலையில் தன்னுடைய  மகள் வழி பேரன்களுக்கு காதனி விழாவை ஜனவரி 28-ம் தேதி மதுரை பாண்டி கோயில் வளாகத்தில் ஜாம் ஜாமென்று நடத்த திட்டமிட்டுள்ளவர், அதற்கான ஏற்பாடுகளைப் பிரமாதப்படுத்தி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சரும் துணை முதலமைச்சரும் கலந்துகொள்கிறார்கள். இந்த விழாவுக்காக அவருடைய ஆதரவாளர்கள் மதுரை மாநகரெங்கும் ராஜுவின் குடும்பத்தினர், பேரப்பிள்ளைகளின் படங்களைப்போட்டு 'அடுத்த அரசியல் தலைமுறையினரை வாழ்த்துகிறோம்' என்று குறிப்பிட்டு மக்களைத் திரும்பி பார்க்க வைக்கிறார்கள். அதிலும் கிரம்மர்சுரேஷ், மெகா சைஸ் பேனர்களை வைத்து செல்லூர் ராஜுவை குஷிப்படுத்தி வருகிறார். வருகிற 28-ம் தேதி மதுரை அதிரப்போகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!