வெளியிடப்பட்ட நேரம்: 11:08 (24/01/2018)

கடைசி தொடர்பு:11:16 (24/01/2018)

போராட்டத்துக்கு ஆட்டோவில் வந்த கட்சிக்காரர்கள்! - திருமாவளவன் மீது 3 பிரிவில் வழக்குப்பதிவு

பேருந்துக்கட்டண உயர்வைக் கண்டித்து, போராட்டம் நடத்திய விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மீது சென்னை அண்ணா சதுக்கம் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

thirumavalavan
 

பேருந்துக் கட்டணத்தை உயர்த்தியுள்ள தமிழக அரசின் நடவடிக்கையைக் கண்டித்தும் கட்டண உயர்வை முழுமையாகத் திரும்பப்பெறக் கோரியும் நேற்று (23.1.2018) காலை சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வி.சி.க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டம் நடத்தியபோது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஆட்டோக்களில் கூட்டத்தை ஏற்றிச் சென்றதாகத் திருமாவளவன் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரின் பேரில் அவர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க