லாரி டிரைவரின் அந்த நிமிடங்கள்! கண்இமைக்கும் நேரத்தில் உயிர் தப்பிய இளம்பெண்கள்!

லாரி டிரைவரின் சாமர்த்தியத்தால் ஸ்கூட்டியில் வந்த இரண்டு இளம்பெண் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்தச் சம்பவம் புதுக்கோட்டை பேருந்து நிலையம் முன்பு நடந்துள்ளது.

புதுக்கோட்டை பேருந்து நிலையம் முன்பு உள்ள ராஜவீதி தெற்கு 4-வது வீதி சாலை எப்போதும் பரபரப்புடன் காணப்படும். இந்தச் சாலையையொட்டி மரவேலைப்பாடுகள் கொண்ட கடைகள் அதிகமாக இருக்கின்றன. இந்தக் கடைகளில் சரக்குகளை இறங்கிவிட்டு கே.ஆர்.ஆர் என்ற பெயர் கொண்ட லாரி ஒன்று சாலையில் வந்துகொண்டிருந்தது. அப்போது, சாலையோரத்தில் இருந்த இரண்டு இளம்பெண்கள் ஸ்கூட்டியில் சாலையை நோக்கி வந்தனர். அப்போது, பின்னால் வந்த லாரியை கவனிக்காமல் அவர்கள் வந்தனர்.

திடீரென லாரியின் முன்பக்க சக்கரத்தில் மோதி ஸ்கூட்டர் கவிழ்ந்தது. இதில் இரண்டு பெண்களும் நிலைத்தடுமாறி லாரியின் பின்பக்க சக்கரம் அருகே விழுந்தனர். உடனடியாக சுதாரித்துக்கொண்ட டிரைவர், லாரியை பிரேக் போட்டுநிறுத்தினார். இதில் அதிர்ஷ்டவசமாக இரண்டு பெண்களும் உயிர் தப்பினர். லாரியின் அடியில் கிடந்த பெண்களை, அருகில் நின்ற பொதுமக்கள் உடனடியாக மீட்டனர். இந்த விபத்தால் இரண்டு பெண்களும் திகைத்துப்போனார்கள்.

டிரைவரின் சாமர்த்தியத்தால் கண்இமைக்கும் நேரத்தில் இரண்டு பெண்கள் உயிர் தப்பினர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!