பேருந்துக் கட்டண உயர்வில் தலையிட முடியாது! - கைவிரித்த நீதிமன்றம்

பேருந்துக் கட்டண உயர்வில் உயர் நீதிமன்றம் தலையிட முடியாது என தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

chennai hc
 

கடந்த 19-ம் தேதி பேருந்துக் கட்டணத்தை உயர்த்தி தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. பேருந்துக் கட்டண உயர்வை எதிர்த்து தமிழகம் முழுவதும் போராட்டம் வெடித்துள்ளது. பேருந்துக் கட்டணத்துக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுத்தாக்கல் செய்யப்பட்டது. தலைமை நீதிபதி அமர்வு முன்பு இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. 

வழக்கு விசாரணையின்போது பேசிய இந்திரா பானர்ஜி,  `பேருந்துக் கட்டணத்தை நிர்ணயிப்பது நீதிமன்றத்தின் பணி அல்ல. அரசு நிர்வாகத்தில் நீதிமன்றம் எப்படி தலையிட முடியும். இந்த பொதுநல மனு விசாரணைக்கு உகந்தது அல்ல. பேருந்துக் கட்டண உயர்வு விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது’ என  தெரிவித்தார். இதையடுத்து, பேருந்துக் கட்டண உயர்வுக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!