ஊழியர் திருமணத்தை முன்னின்று நடத்திய நடிகர் சூர்யா! - வைரலாகும் புகைப்படங்கள்!

திருப்பதி சற்று ஆச்சர்யத்தில் இருந்தது. கோலிவுட்டின் மூன்று முன்னணி நட்சத்திரங்கள் அங்குள்ள திருமண மண்டபத்தில் முகாமிட்டிருந்தனர். விஷயம்... இதுதான்! நடிகர் சூர்யாவின் அலுவலக உதவியாளர் முருகனின் திருமணம் திருப்பதியில் நடந்தது. திருமணத்தில் குடும்பத்துடன் பங்கேற்று, திருமணத்தையும் நடத்தி வைத்தது நடிகர் சூர்யா. இதற்காக சூர்யா குடும்பமே ஒருநாள் முழுவதும் திருப்பதியில் இருந்தது. 

நடிகர் சூர்யா நடத்தி வைத்த திருமணம்

திருமணத்துக்கான அனைத்துச் செலவுகளையும் நடிகர் சூர்யாவே ஏற்றார். 'திருமணச் செலவுதான் செய்கிறோமே' என்பதுடன் அவர் நிறுத்திக்கொள்ளவில்லை. மண்டபத்தில் திருமண வேலைகளையும் நடிகர் சூர்யாவே முன்னின்று செய்தார். சூர்யா பட்டு வேட்டி, சட்டை அணிந்தும். ஜோதிகா, பச்சை வண்ணத்தில் சேலையும் அணிந்து திருமணத்தில் உற்சாகமாகக் காணப்பட்டனர். மணமேடையில் சூர்யாவும் ஜோதிகாவும் சந்தோஷமாக உரையாடியதோடு, மணமக்கள் முருகன் - கோவிந்தம்மாளையும் அடிக்கடி சீண்டியது, திருமணத்தில் பங்கேற்றவர்களை ஆச்சர்யத்துக்குள்ளாக்கியது.  

சூர்யா நடத்தி வைத்த திருமணம்

நடிகர் சிவக்குமார், முருகனிடம் தாலியை எடுத்துக் கொடுக்க, அவர் மணமகள் கழுத்தில் கட்டினார். ஒருநாள் கால்ஷீட்டுக்குப் பல லட்சம் சம்பளம் பெறும் நடிகர் சூர்யா, கார்த்தி ஆகியோர் தங்களிடம் பணி புரியும் ஊழியரின் திருமணத்துக்குச் செல்ல நேரம் ஒதுக்கியதோடு முன்னின்றும் நடத்தியது சமூக வலைதளங்களில் பாராட்டப்பட்டு வருகிறது. புகைப்படங்களும் வைரலாகி வருகின்றன. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!