பேரறிவாளன் மனு..! சி.பி.ஐ-யிடம் விளக்கம் கேட்ட உச்ச நீதிமன்றம்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளனுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை மறுபரிசீலனை செய்யுமாறு தாக்கல் செய்யப்பட்ட மனுவின் மீது சி.பி.ஐ-யிடம் உச்ச நீதிமன்றம் விளக்கம் கேட்டுள்ளது. 

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு தொடர்பாகப் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் ஆயுள் கைதியாகச் சிறையில் இருந்துவருகின்றனர். சிறையிலுள்ள ஏழு பேரையும் விடுவிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்குத் தமிழக அரசு கடிதம் எழுதியது. அதை எதிர்த்து மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. நேற்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், ஏழு பேரையும் விடுவிப்பது குறித்து மூன்று மாதங்களுக்குள் முடிவு செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்தநிலையில், பேரறிவாளனுக்கு சி.பி.ஐ நீதிமன்றம் விதித்த தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று பேரறிவாளன் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் இன்று மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு குறித்து மூன்று வார காலத்துக்குள் பதிலளிக்க வேண்டும் என்று சி.பி.ஐ-க்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!