வெளியிடப்பட்ட நேரம்: 20:00 (24/01/2018)

கடைசி தொடர்பு:20:00 (24/01/2018)

நலத்திட்ட விழாவுக்கு வந்த கலெக்டர் வீரராக ராவை முற்றுகையிட்ட மாணவர்கள்!

தமிழகத்தில் பேருந்துக் கட்டணம் உயர்வு கடந்த சனிக்கிழமை முதல் அமலுக்கு வந்தது. போக்குவரத்துத் தொழிலாளர்களின் ஊதிய உயர்வு , டீசல் விலை உயர்வு, பராமரிப்பு, உதிரிபாகங்கள் உள்ளிட்ட விலை உயர்வுகளைக் காரணம் காட்டி தமிழக அரசுப் பேருந்துக் கட்டணம் உயர்த்தியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். மதுரை திருப்பரங்குன்றம் மன்னர் கல்லூரி மாணவ, மாணவிகள் 500க்கும் மேற்பட்டவர்கள் கல்லூரி எதிரே திருப்பரங்குன்றம் சாலையில் நேற்று  மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினார்கள். இதனால் காவல்துறையினர் கூட்டத்தை கலைக்க மாணவ- மாணவிகள் மீது தடியடி நடத்தினர். இதனால் அதற்குப் பின் ஓட்டம் பிடித்தனர்.

அமைதியான முறையில் போராட்டம் நடத்திய கல்லூரி மாணவர்கள் மீது தமிழக அரசு காவல்துறை மூலம் மிரட்டி தடியடி நடத்தியுள்ளதாகவும் எனவே காவல்துறையினர் மன்னிப்பு கோர வேண்டும் எனவும் தடியடி நடத்திய செயலைக் கண்டிப்பதாகவும் தமிழக அரசுக்கு எதிராகவும், காவல்துறைக்கு எதிராகவும் கண்டன கோஷங்களை எழுப்பும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மன்னர் கல்லூரியில் சட்டப் பணிகள் குறைதீர்க்கும் முகாமில் நலத் திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிக்கு நீதிபதி, மாவட்ட ஆட்சி தலைவர் வீரராகவராவ் ஆகியோர் வந்தனர். அப்போது, கலெக்டரை மாணவர்கள் முற்றுகையிட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.