கருணாநிதியிடம் 2ஜி புத்தகத்தைக் கொடுத்து ஆசி பெற்ற ஆ.ராசா..!

2ஜி தொடர்பாக தான் எழுதியப் புத்தகத்தை தி.மு.க தலைவர் கருணாநிதியைச் சந்தித்து முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா வழங்கினார்.

தொலைதொடர்புத் துறை அமைச்சராக, ஆ.ராசா இருந்தபோது, 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்ததில் ஊழல் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. அந்த வழக்கில் ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டது. இதுதொடர்பான வழக்கில் சி.பி.ஐ நீதிமன்றம் குற்றம்சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்தது. இதற்கிடையில், 2ஜி வழக்குத் தொடர்பாக ஆ.ராசா, ’’2ஜி சாகா அன்ஃபோல்ட்ஸ்’’ என்ற புத்தகத்தை எழுதியிருந்தார்.

அந்தப் புத்தகம் கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் டெல்லியில் வெளியிடப்பட்டது. அந்தப் புத்தகத்தை காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபருக் அப்துல்லா வெளியிட்டார். இந்தநிலையில், புத்தகம் வெளியிடப்பட்டு மூன்று தினங்கள் கழித்து அந்தப் புத்தகத்தை தி.மு.க தலைவர் கருணாநிதியிடம் ஆ.ராசா வழங்கி வாழ்த்துப் பெற்றார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!