பெற்றோர்களைப் பதறவைத்த 5 மகன்கள்! திருவாரூரில் நடந்த அதிர்ச்சி சம்பவம் | Students who took drugs admitted in hospital

வெளியிடப்பட்ட நேரம்: 09:22 (25/01/2018)

கடைசி தொடர்பு:09:41 (25/01/2018)

பெற்றோர்களைப் பதறவைத்த 5 மகன்கள்! திருவாரூரில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

திருவாரூர் அருகே ஒரு கிராமத்தில் போதைக்காக  பஞ்சர் ஒட்டும் பசையை தண்ணீரில் கலந்து குடித்த மாணவர்கள் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

drugs

திருவாரூர்  மாவட்டம்  திருத்துறைப்பூண்டி அருகே உள்ள அபிஷேகக் கட்டளை கிராமத்தில்தான் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் 5 பேர் நேற்று மாலை சைக்கிள் டியூப்களுக்கு பஞ்சர் ஒட்டப் பயன்படும் பசையை தண்ணீர் பாக்கெட்டில் கலந்து குடித்துள்ளனர். போதை வரும் என்று நினைத்துக்கொண்டு அதை குடித்ததாக கூறப்படுகிறது.  பசை கலந்த தண்ணீரை குடித்துவிட்டு வீட்டுக்குச் சென்றதும் மாணவர்கள் மயங்கி விழுந்தனர்.

வாந்தி, வயிற்றுப்போக்கு என உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளது.  இதையடுத்து, அம்மாணவர்கள் பெற்றோர்களிடம் நடந்ததை விவரித்துள்ளனர். பதறிப்போன பெற்றோர்கள் பிள்ளைகளை திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.  சைக்கிள் பஞ்சர் ஒட்டும் பசையை தண்ணீரில் கலந்து குடித்தால் ஒருவித போதை ஏற்படும் என்று யாரோ கூறுயதை நம்பி பரிசோதித்த மாணவர்கள் தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.