வெளியிடப்பட்ட நேரம்: 11:15 (25/01/2018)

கடைசி தொடர்பு:11:18 (25/01/2018)

13 ஆண்டுகளாகத் தமிழகத்தில் போலியோ பாதிப்பு இல்லை! - விஜயபாஸ்கர்

சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் தடுப்பூசி மருந்து குளிர்பதன சேமிப்பு அறையைத் தொடங்கிவைத்த  சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், ‘தமிழகத்தில் 2004-ம் ஆண்டு முதல் தற்போது வரை  போலியோ பாதிப்பு இல்லை’ என்று தெரிவித்துள்ளார். 

விஜயபாஸ்கர்
 

மேலும், ’தமிழகம் முழுவதும் வரும் 28-ம் தேதி, போலியோ சொட்டுமருந்து முகாம் நடைபெறும்.  மாநிலம் முழுவதும் 71 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு மருந்து கொடுக்க விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. செங்கல்பட்டு அருகே, மத்திய – மாநில அரசுகள் இணைந்து 594 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தடுப்பூசி மருந்து தயாரிப்பு நிறுவனம் அமைக்கும் பணி முடிவடையும் நிலையில் உள்ளது. இந்த நிறுவனம், நாடு முழுவதும் உள்ள தேவையில் 75 சதவிகிதத்தைப் பூர்த்திசெய்யும்’  என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க