இந்தி திணிப்பை எதிர்த்து உயிர்த் தியாகம் செய்த சின்னசாமிக்குத் தலைவர்கள் மரியாதை!

மொழிப்போர் தியாகி கீழப்பழுவூர் சின்னசாமி சிலைக்கு தி.மு.க, அ.தி.மு.க, தே.மு.தி.க-வினர் என அனைத்துக் கட்சியினர் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

                                       

1965-ல் காங்கிரஸ் ஆட்சி முடிவுக்கு வரும் தருவாயில் 'நாடு முழுவதும் இந்தியே ஆட்சி மொழி. ஆங்கிலம் நீடிக்கக் கூடாது' என்று வட மாநிலத்தைச் சேர்ந்த எம்.பி-க்கள் நாடாளுமன்றத்தில் உரக்கக் குரல் கொடுத்தார்கள். அதற்குப் போட்டியாக 'ஆங்கிலம் நீடிக்க வேண்டும்' என்று இந்தி பேசாத தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களைச் சேர்ந்த  எம்.பி-க்களும் நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்தார்கள். முதலில் தமிழுக்காகத் தொடங்கிய போராட்டம் பிறகு, 'இந்தி பேசும் மாநிலங்கள்' 'இந்தி பேசாத மாநிலங்கள்' என்று போராட்டம் வெடித்து கிளம்பத் தொடங்கியது.

                           

இந்தச் சூழ்நிலையில், நேரு மறைந்து பிரதமராக லால் பகதூர் சாஸ்திரி பொறுப்பேற்றார். ஆனால், அவரே 'இந்தி திணிப்பு கிடையாது' என்ற நேருவின் உறுதிமொழிக்கு மாறாகச் செயல்படத் தொடங்கினார். அப்போது உள்துறை அமைச்சராக இருந்த குல்ஜரிலால் நந்தா, 'அரசியல் சட்டம் எட்டாவது அட்டவணையில் உள்ளபடி இந்தி மொழி மட்டுமே அரசாங்க மொழியாக இருக்கும்' என்ற பகீர் அறிவிப்பை செய்தார். நாடாளுமன்றத்திலேயே எம்.பி-க்கள் மோதல் வெடித்தது. அதனால் தமிழகம் கொந்தளித்தது. இந்தியை ஒருபோதும் தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம் என்று இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூரைச் சேர்ந்த தியாகி சின்னசாமி திருச்சி ரயில் நிலையத்தில் கடந்த 1965-ம் ஆண்டு மண்ணெண்ணெயை உடம்பில் ஊற்றி தீ பற்றவைத்து `தமிழ் வாழ்க, இந்தி ஒழிக' எனக் கூறிக்கொண்டே தற்கொலை செய்துகொண்டார். இதன் பிறகு, இந்தி எதிர்ப்புப் போராட்டம் தமிழகம் எங்கும் போராட்டங்கள் வெடிக்கத் தொடங்கியது. இவர் இறந்த தினமான இன்று மொழிப்போர் தியாகி தினம் என அனுசரிக்கப்படுகிறது.

                                  

தியாகி சின்னாசாமி சொந்த ஊரான அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் பேருந்து நிலையத்தில் இருக்கும் அவரது சிலைக்கு அ.தி.மு.க சார்பில் அரசுத் தலைமைக் கொறடா தாமரை.ராஜேந்திரன், தலைமையில் ஊர்வலமாக வந்து மாலை அணிவித்து 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தி மரியாதை செலுத்தினர். அடுத்ததாகத் தி.மு.க மாவட்டச் செயலாளர் சிவசங்கர், தே.மு.தி.க மாவட்டச் செயலாளர்  என அனைத்துக் கட்சியினர் சார்பில் தியாகி சின்னசாமிக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!