வெளியிடப்பட்ட நேரம்: 18:58 (25/01/2018)

கடைசி தொடர்பு:20:13 (25/01/2018)

தீக்கிரையான தனியார் தொழிற்சாலை! உயிர்தப்பிய ஊழியர்கள்

ஓசூர் தனியார் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொருள்கள் தீயில் எரிந்து நாசமாகின.

தீ விபத்து

 கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரிலிருந்து கெலமங்கலம் சாலையில் உள்ள அக்கவுண்டபள்ளியில் சி.எம் என்ற தனியார் நிறுவனம் இயங்கி வருகிறது. அந்த ஆலையிலிருந்து  பல தனியார்  நிறுவனங்களுக்குத் தேவையான லைட், லைட் டூம் கவர், பிளாஸ்டிக் கவர் உள்ளிட்ட உதிரி பாகங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த நிறுவனத்தில் சுமார் 1,200 தொழிலார்கள் மூன்று ஷிப்ட்களில் பணியாற்றி வருகின்றனர். முதல் ஷிப்ட் காலை 6 மணிக்கும் இரண்டாவது ஷிப்ட் நண்பகல் 2 மணிக்கும், இரவு 9 மணிக்கு மூன்றாவது ஷிப்ட்டும் தொடங்குகின்றன. 

தீ விபத்து

வழக்கம்போல இன்று காலை 6 மணிக்கு, முதல் ஷிப்ட் ஊழியர்கள் காலையில் வேலை செய்துவிட்டு, நண்பகல் 11.30 மணிக்கு மதிய உணவுக்காக வெளியே வந்துள்ளனர். அப்போது, உற்பத்தி செய்யும் பிரிவில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டு, உற்பத்தி பொருள்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ள குடோன்களுக்கும் தீ பரவியது. இதனால் நிறுவனத்தில் பெரும் பகுதி எரிந்து சாம்பல் ஆனது. 

நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்துக்கு நிர்வாகத்தின் கவனக் குறைவே காரணம் என்று தீயணைப்பு வீரர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். தீயை அணைக்கத் தேவையான குறைந்தபட்ச முன்னெச்சரிக்கை நடவடிக்கைகூட நிறுவனத்தில் செய்து வைக்கவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர். அந்த நிறுவனத்தின் உற்பத்தி பொருள்கள் பெரும்பான்மையானவை பிளாஸ்ட்டிக் என்பதால் காலை 11.30 மணிக்குப் பற்றிய தீ மாலை 6 வரைக்கும்கூட அணைக்க முடியவில்லை என்கின்றனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க