பரோட்டா மாஸ்டர் கொலையில் அண்ணன்-தம்பிக்கு ஆயுள்!

அருப்புக்கோட்டையில் பரோட்டா மாஸ்டரை கொலை செய்த வழக்கில் குற்றவாளிகளான சகோதரர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து பரபரப்பான தீர்ப்பளித்துள்ளது விருதுநகர் நீதிமன்றம்.

பரோட்டா மாஸ்டர்

அருப்புக்கோட்டையில் கடந்த 2013-ம் ஆண்டு தமிழ்மணி திரையரஙகம் எதிரில் அமைந்துள்ள சோமசுந்தரம் என்பவரின் உணவகத்தில் பணியாற்றிய பரோட்டா மாஸ்டர் சொக்கலிங்கம் என்பவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.

தனிப்பட்ட பகையில்,  புரோட்டா மாஸ்டரை அண்ணன் தம்பிகளான  சரவணன்,ராஜா இருவரும் சேர்ந்து கத்தியால் குத்தி கொன்றுவிட்டனர் என்று  போலிஸ் புலனாய்வு செய்தது. இந்தக் கொலை சம்பந்தமான வழக்கு விசாரணை  விருதுநகர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. 

இன்று இந்த வழக்கில் தீர்ப்பை வாசித்த நீதிபதி முருகேசன், இந்தக் கொலை சம்பவத்தில் சம்பந்தப்பட்ட சரவணன், ராஜா ஆகியோருக்கு 302-வது செக்சன்படி கொலை செய்ததுக்கு ஆயுள் தண்டனையும் , மேலும் 307-வது செக்சன்படி கொலை முயற்சிக்கு 7வருட சிறைத் தண்டனையும், மற்றும் 5000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!