வெளியிடப்பட்ட நேரம்: 08:57 (26/01/2018)

கடைசி தொடர்பு:10:14 (26/01/2018)

கார் ஓட்டுநர் தீக்குளித்த சம்பவம்! - காவல் உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம் 

தரமணி அருகே கார் ஓட்டுநர் மணிகண்டன் தீக்குளித்த சம்பவத்தில் காவல் உதவி ஆய்வாளர் தாமரைச் செல்வனை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 

chennai
 

நேற்று முன் தினம் (24/01/2018) சென்னை பழைய மாமல்லபுரம் சாலையில் போக்குவரத்துப் போலீஸார் தாக்கியதாக மணிகண்டன் என்ற கார் ஓட்டுநர் தீக்குளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

சம்பவம் நடந்த அன்று பழைய மாமல்லபுரம் சாலையில் தனியார் நட்சத்திர விடுதி அருகே வேளச்சேரிக்குத் திரும்பும் இடத்தில் டிராஃபிக் போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்தவழியே வந்த வாடகை கார் ஒன்றை போலீஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர். அந்த காரை ஓட்டி வந்த மணிகண்டன் என்ற ஓட்டுநர் சீட்பெல்ட் அணியவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து போக்குவரத்துக் காவல் துணை ஆய்வாளர் தாமரைச் செல்வன் உள்ளிட்ட போலீஸார் விசாரித்தபோது, இருதரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில், மணிகண்டனை போலீஸார் தாக்கியுள்ளனர். இதையடுத்து, காரில் இருந்த பெட்ரோலை எடுத்து தன் மேல் ஊற்றிக்கொண்ட மணிகண்டன், திடீரென தீவைத்துக் கொண்டார். இதனால், அதிர்ச்சியடைந்த போலீஸார் மற்றும் அப்பகுதி மக்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆபத்தான நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரின் உடல்நிலை குறித்து தற்போதுவரை எந்தத் தகவலும் வெளிவரவில்லை.

இந்நிலையில் காவல் உதவி ஆய்வாளர் தாமரைச் செல்வனை பணியிடை நீக்கம் செய்து சென்னைக் காவல் ஆணையர்  இன்று உத்தரவிட்டுள்ளார். 
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க