திருமண விழாவை விஞ்சிவிடும் ஜெயின் சமூக மக்களின் துறவறம் செல்லும் விழா!

யனாவரம் ஜெயின் தாதாவாடி கோயிலில் 28 வயதான இளம்பெண் மம்தா துறவறம் செல்லும் நிகழ்ச்சி இன்று கோலாகலமாகத் தொடங்கியது. அவருடன் ராஜஸ்தானைச் சேர்ந்த அவரின் உறவுப் பெண்கள் இருவரும் துறவறம் செல்ல இருக்கிறார்கள். ஜெயின் சமூகத்தில் துறவறம் செல்வது ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு சடங்கு. ஜெயின் குழந்தைகளுக்கு மகாவீரரின் போதனைகளைப் பற்றியும், துறவறம் பற்றியும் சிறுவயதில் இருந்தே சொல்லி வளர்க்கப்பட்டாலும், தாங்களாக விரும்பி முடிவு செய்யும் போதுதான் துறவறம் செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். 

ஜெயின் துறவற விழா

மம்தா, தன் பெற்றோருடன் பல வருடங்களாக சென்னையில் வசித்து வருகிறார். எம்.பி. ஏ படித்துள்ள மம்தா துறவறம் செல்வது பற்றி கூறுகையில்,"உலகில் எந்த பந்தமும் நிலையில்லை, கடவுளுக்கும் நமக்கும் இருக்கும் பந்தம் மட்டுமே நிலையானது. அதனால்தான் துறவியாகப் போகிறேன் " என்றார். திருமணம் நடப்பது போல துறவறம் செல்லும் நிகழ்ச்சியும் கோலாகலாகத் தொடங்கியது. திருமணப் பெண்ணைப் போல மம்தா அலங்கரிக்கப்பட்டிருந்தார். 

மம்தா

இன்று மட்டும் நாளை நடைபெறும் இந்த விழாவில் நாளைதான் முக்கிய நிகழ்வான வீட்டைவிட்டு வெளியேறி துறவறம் செல்லும் நிகழ்வு நடைபெற இருக்கிறது. 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!