குடியரசு தின சிறப்பு கிராம சபை கூட்டத்தில் கலந்துகொண்ட மாவட்ட ஆட்சியர்!

சிவகங்கை மாவட்டத்தில் குடியரசு தினத்தை ஒட்டி சிறப்பு கிராம சபைக் கூட்டம் நேற்று (26.1.2018) நடைபெற்றது.  
 

சிவகங்கை ஊராட்சி ஒன்றியம், வெங்களுர் ஊராட்சியில் மூத்த உறுப்பினர் பெருமாள்  தலைமையில்  கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சித் தலைவர் லதா, இக்கூட்டத்தில் சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்டார். 

இக்கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்தும், திட்ட அறிக்கை, குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துதல், கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல், கிராம ஊராட்சி வளர்ச்சித் திட்டம்  அந்தியோதயா இயக்கம், பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டம் ஊராட்சிப் பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப் பணிகள் முன்னேற்றம் மற்றும் நிதி செலவின விபரங்கள் குறித்து விவாதித்தல், முழு சுகாதார தமிழகம்-முன்னோடி தமிழகம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், மகளிர் திட்டம், பொது விநியோகத் திட்டம், 2018-2019-ஆம் ஆண்டு முதலமைச்சரின் சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடு திட்ட பயனாளிகள் பட்டியல் ஒப்புதல் குறித்தும் மற்றும் இதர பொருட்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சித் தலைவர் லதா பேசும்போது, "பொதுமக்கள் குப்பைகளைத் தனித்தனியாக பிரித்து கொடுக்க வேண்டும். பிளாஸ்டிக் பயன்படுத்துவதைத் தவிர்த்து, கடைகளுக்குச் செல்லும்போது துணிப்பையை எடுத்துச் செல்ல வேண்டும். நமது மாவட்டத்தில் தனியார் மற்றும் அரசுத்துறைகளில் பணிபுரியும் மகளிர்களுக்கு 50 சதவிகித மானியத்தில் அம்மா வாகனம் ஒதுக்கீடு செய்யப்பட்டு வழங்கப்பட உள்ளது. இதில் ஊனமுற்றோர், கணவனை இழந்தவர்கள், கணவனால் கைவிடப்பட்டவர்கள், முதிர்கன்னிகள் ஆகியோர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இதற்கு அடையாள அட்டை, வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். இதற்கான விண்ணப்பங்களை அந்தந்த ஊராட்சி ஒன்றியங்களில் பெற்று பிப்ரவரி 5-ஆம் தேதிக்குள்  வழங்க வேண்டும்’’ என்றார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!