நீரில் மூழ்கி 5 பேர் மரணம்..! சேலத்தில் சோகம்

சேலம் உடையாப்பட்டி அருகே உள்ளது கந்தாஸ்ரமம் மலைக் கோவில்.  இந்தக் கோவில் அருகில் உள்ள கல்குவாரி பள்ளத்தில் தேங்கியுள்ள நீரில் குளிப்பதற்காக சேலம் அம்மாப்பேட்டையைச் சேர்ந்த நாகராஜ் அவரது மனைவி பிரேமா மற்றும் இவர்கள் குடியிருக்கும் வீட்டிற்கு அருகில் உள்ள சுகண்யா ஆகிய 3 பேரும் சென்றிருக்கிறார்கள்.

அப்போது கல்குவாரி பள்ளத்தில் ஆழம் அதிகமாக இருந்ததால் நீச்சல் தெரியாமல் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். அப்பகுதியைச் சேர்ந்த சிலர் ஏற்கனவே இது போன்றச் சம்பவங்கள் இப்பகுதியில் நிகழ்ந்தும் கூட காவல்துறை அனுமதி இல்லாமல் செயல்படும் கல் குவாரிகளை மூடுவதில்லை என்று கூச்சலிட்டுக் கொண்டிருந்தார்கள்.

அப்போது சேலம் கிச்சிபாளையம் காவல்துறையினர் உடல்களைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றனர். கூட்டத்தில் எதிர்பாராத விதமாக போலீஸ் மீது கற்களைக் கொண்டு வீசினார்கள். இதனால் அப்பகுதியில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பிறகு உடல்களைக் கைப்பற்றி சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள்.

இதை போல சேலம் மாவட்டம் தாரமங்கலதைச் சேர்ந்த 15 வயதுடைய 10ம் வகுப்பு மாணவர்கள் விக்னேஷூம், கெளதமும் ஏரி நீரில் மூழ்கி மரணம் அடைந்து சேலத்தில் பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!