காரைக்காலிருந்து கடத்திய மதுபானங்கள் பறிமுதல்..! | Alcoholic Beverages ceased by Tamilnadu police

வெளியிடப்பட்ட நேரம்: 03:30 (28/01/2018)

கடைசி தொடர்பு:03:30 (28/01/2018)

காரைக்காலிருந்து கடத்திய மதுபானங்கள் பறிமுதல்..!

காரைக்காலிலிருந்து காரில் கடத்திச் சென்ற மதுபாட்டில்களைச் சினிமா பாணியில் சேசிங் செய்து பிடித்திருக்கிறார்கள் நாகை மாவட்ட மதுவிலக்கு காவல்துறையினர். 

தமிழக டாஸ்மாக் மதுபான விலையைவிட காரைக்காலில் மதுபான விலை மிகவும் குறைவு என்பதால் அங்கிருந்து தமிழக மாவட்டங்களுக்கு மதுபானங்கள் கடத்தப்படுவது தொடர் நிகழ்வாக இருக்கிறது. இந்நிலையில், இன்று காரைக்கால் எல்லையான வாஞ்சூர் சோதனைச்சாவடியில், நாகை மாவட்ட மதுவிலக்கு டி.எஸ்.பி. சாமிநாதன் மேற்பார்வையில் வாகன பரிசோதனை செய்து கொண்டிருந்தனர்.

அப்போது, காரைக்காலிலிருந்து சீறிப்பாய்ந்து வந்தக் காரை நிறுத்தியபோது அது நிற்காமல் விரைந்துச் சென்றது.  உடனே மதுவிலக்குப் பிரிவு எஸ்.ஐ. ராஜுவுடன் சென்ற போலீசார், 10 கி.மீ. தூரம் விரட்;டிச் சென்று திட்டச்சேரி என்ற ஊரில் காரை மடக்கிப் பிடித்தனர். அந்தக் காரில் 1.5 லட்ச ரூபாய் மதிப்புள்ள 200 மதுபாட்டில்கள் இருந்தன. மதுபாட்டில்களைக் கடந்தி வந்த புதுக்கோட்டையைச் சேர்ந்த தங்கபாடியன், கார்த்திகேயன், சரவணன், பார்த்தசாரதி ஆகியோரை கைதுசெய்ததோடு, காரையும், மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.