கரூரில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார் எம்.ஆர்.விஜயபாஸ்கர்..!

கரூர் மாவட்டத்தில் உள்ள ராஜேந்திரம் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பங்கேற்று பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

 

கரூர் மாவட்டம், குளித்தலை வட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் கோவிந்தராஜ் அவர்கள் தலைமையில் பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் மருதராஜா அவர்கள் முன்னிலையில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அவர்கள் இன்று( 27.01.2018 ) பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார். நகரப்பகுதியில் உள்ள மின்விளக்குகளைத் திறந்து வைத்தார். 24 பயனாளிகளுக்கு 19.50 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கி விழா பேருரையாற்றினார். 

இந்நிகழ்ச்சியில், போக்குவரத்துத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்ததாவது, 'மாண்புமிகு நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் தமது தொகுதிக்குட்பட்ட ஒரு கிராமத்தினை தேர்வு செய்து அரசு செயல்படுத்தும் அனைத்து நலத்திட்டங்களையும் செய்து அந்தக் கிராமத்தை முதன்மை கிராமமாக உருவாக்கி அந்தத் தொகுதி முழுமைக்கும் முன்மாதிரியாக திகழச் செய்கிறார்கள். அதன் அடிப்படையில், இந்தக் கிராமத்தில் 1,305 பணிகள் 2.51 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செய்யப்பட்டு அனைத்து வசதிகளும் கூடிய நவீன கிராமமாக திகழ்கிறது. இதேபோன்று, மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து கிராமங்களும் முன்மாதிரி கிராமமாக திகழ்வதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்" என கேட்டுக்கொண்டார்.
 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!