வெளியிடப்பட்ட நேரம்: 08:46 (28/01/2018)

கடைசி தொடர்பு:08:46 (28/01/2018)

`ஸ்மார்ட் கார்டு இல்லாவிட்டாலும் ரேஷன் பொருள் வழங்கப்படும்' - அமைச்சர் காமராஜ் தகவல்

மார்ச் 1-ம் தேதி முதல் ஸ்மார்ட் கார்டு இல்லாவிட்டால் ரேஷன் கடைகளில் பொருள்கள் வழங்கப்படாது என்று தமிழக உணவுத்துறை முன்னர் கூறியிருந்தது. ஆனால், ஸ்மார்ட் கார்டு இல்லாவிட்டாலும் அனைவருக்கும் ரேஷன் பொருள்கள் வழங்கப்படும் என்று தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். 

அமைச்சர் காமராஜ்

இது குறித்து செய்தியாளர்கள் மத்தியில் அவர் பேசுகையில், `ஸ்மார்ட் கார்டு திட்டத்தை முழுமையாக அமல்படுத்துவது கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. அது தொடர்பாக 99 சதவிகிதம் பணிகள் முடிந்துவிட்டன. மார்ச் மாதத்துக்குள் பணிகள் முழுவது முடிவடையும். அப்படி இந்தத் திட்டத்தை விரைந்து முடிப்பதுதான் அரசின் எண்ணம். சீரிய முறையில் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் கண்டிப்பாக மார்ச் 1-ம் தேதிக்குள் பணிகள் முடிவடையும். அதே நேரத்தில், ஸ்மார்ட் கார்டு இல்லாவிட்டாலும் அனைவருக்கும் ரேஷன் பொருள்கள் வழங்கப்படும்' என்று கூறியுள்ளார்.