வெளியிடப்பட்ட நேரம்: 10:00 (28/01/2018)

கடைசி தொடர்பு:10:00 (28/01/2018)

போலியோ இல்லாத மாநிலமாக திகழ்கிறது தமிழகம்: அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து இன்று அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், மாநிலம் முழுவதும் 76 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு மருந்து கொடுக்க விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு மாலை 5 மணி வரை போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. 

விஜயபாஸ்கர்

இந்நிலையில், கிரீன்வேஸ் இல்லத்தில் இருந்த போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாமை தமிழக முதலமைச்சர் எடப்பாடி  பழனிசாமி துவக்கி வைத்தார். அப்போது சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உடனிருந்தார். 

முகாம் தொடங்கிய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஜயபாஸ்கர், `தமிழகம் முழுவதும் 43,000 சிறப்பு போலியோ சொட்டு மருந்து கொடுக்கும் முகாம்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இதன் மூலம் 76 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. போலியோ இல்லாத மாநிலமாக தமிழகம் தொடர்ந்து திகழ்கிறது' என்று பேசினார்.