"பசு எனக்கு பிள்ளை மாதிரி... அதை வெட்டியவங்களுக்கு தண்டனை வாங்கித் தருவேன்!" - சபதமெடுத்த பெண் | I will not spare the person who injured my cow says this woman

வெளியிடப்பட்ட நேரம்: 10:21 (28/01/2018)

கடைசி தொடர்பு:10:21 (28/01/2018)

"பசு எனக்கு பிள்ளை மாதிரி... அதை வெட்டியவங்களுக்கு தண்டனை வாங்கித் தருவேன்!" - சபதமெடுத்த பெண்

 

பசு

 

 நெல் வயலுக்குள் நுழைந்த பசு மாட்டு காலைவெட்டி ஆத்திரத்தை தீர்த்திருக்கிறார் பெண் ஒருவர்.இந்தச் சம்பவம் சிவகங்கை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது

 சிவகங்கை மாவட்டம்,திருப்பத்தூரில் இருந்து 4 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது அமிர்தபுரம் கிராமம். இங்கு பல்வேறு சாதியினர் வசித்து வந்தாலும் பிரதான தொழில்  விவசாயம் மட்டுமே.  இந்தப் பகுதியில் தை மாதம் முதல் வடமாடு மஞ்சுவிரட்டு ரொம்ப சிறப்பாக நடைபெறும். அப்படி விடப்பட்டதில் அமிர்தாபுரம் கிராமத்திற்குள் சில மாடுகள் வந்து விட்டது. வந்த மாடுகளை பார்த்து ஆதிலெட்சுமி ஆசையாய்  வளர்த்து வந்த பசு மாடு மிரண்டு காட்டுபகுதிக்குள் கழுத்து கயிறோடு வசந்தா வயலுக்கு போய் விட்டது. அந்த பசு மாட்டை பார்த்த வசந்தா மனசாட்சி இல்லாமல் தன் கையில் வைத்திருந்த அருவாளை எடுத்து பசுவின் காலை கடந்த செவ்வாய்கிழமை பொழுது சாய வெட்டி விட்டார். அந்த இடத்திலேயே துடிதுடித்தது. இரத்தம் கொட்டியது. ஆசையாய் வளர்த்த  பசுமாட்டை பார்த்தும் பிரம்மை பிடித்தது போல் நின்றார் ஆதிலெட்சுமி.

 "எனக்கு நாலு பொம்பள பிள்ளைகள். எம் புருசனும் இறந்து போயிட்டாரு. இந்த பசு மாட்ட வச்சுதான் கஞ்சி குடிச்சுட்டு வர்றேன். என்னோட பசு மாட்டை எப்பவும்  கட்டிப்போட்டு வச்சுருப்பேன். சம்பவத்தன்று நான் மாட்ட அப்படியே கயிறோட விட்டுட்டேன். விவசாய நேரத்துல தண்டோரா போட்டு மாடுகளை விவசாய நிலங்களில் மேய விடக்கூடாதுனு சொல்லுவாங்க. வாய் இல்லாத ஜீவன். அதுக்கு என்ன தெரியும்? பொதுவாக மேய்ச்சலுக்கு மாடு போனாலே மாட்ட பிடிச்சு ஊர் மந்தையில கட்டிப்போடுறது, அபராதம் போடுறது ஊர் வழக்கம். இதையெல்லாம் மீறி உயர் சாதி வர்க்கம் என்கிற திமிரு அந்த வசந்தாவிற்கு இருக்கிறது. என்னோட பசு மாட்டை சேர்த்து இதுவரைக்கும் ஐந்துக்கும் மேற்பட்ட மாடுகளை வெட்டியிருக்கிறார்

மாடு

இதுவரைக்கும் யாரும் நீதி கேட்டு போராடவில்லை. மனுநீதி சோழன் வரலாறு எல்லாருக்கும் தெரியும். தன் மகன் தவறு செய்தான் என்பதற்காக நீதி கேட்டு வந்த பசுவிற்கு மகனையே கொன்று நீதி வழங்கிய வரலாறு நம் நாட்டில் உண்டு. எனக்கு வருமானம் தரும் பிள்ளையாக பசுவை பார்க்கிறேன். மனசாட்சி உள்ள யாரும் மாட்டு கால் குழம்பு , நரம்புகள் தெறிக்கும் அளவிறகு வெட்ட மாட்டார்கள். விவசாயம் பாதிச்சு போச்சு உன் மாட்டை தரமுடியாதுனு சொல்லியிருந்தால் கூட சந்தோசமாக மாட்டை விட்டுட்டு வந்திருப்பேன். 

திருப்பத்தூர்ல இருந்து டாக்டர் வர வைத்தோம். அவரும் வந்து பார்த்துட்டு கால் குழம்பு, நரம்புகள் துண்டிக்கப்பட்டு விட்டது.இனிமேல் மாடு எழுந்து நடக்க முடியாது. காப்பற்றுவது சிரமமான காரியமாகும்.அதுக்கு மேல உங்க குல சாமிய வேண்டிக்கோங்கனு சொல்லிட்டாரு. அதோட தான் திருக்கோஷ்டியூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறேன். பசு வதை,மிருகவதை தடுப்புச் சட்டம் இருந்து என்ன பயன்? இதுபோன்ற கொடூர ஆட்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்பதற்காக தான் போராடிக்கொண்டிருக்கிறேன்" என்கிறார் கண்ணீர் மல்க.

போலீஸ் தரப்பில் பேசிய போது " பசு மாட்டை வெட்டிய வசந்தாவிடம் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.அவர் மீது நடவடிக்கை எடுப்பது உறுதி" என்கிறார்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்